உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, June 11, 2023

புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கடுமையான காயம்

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் சிதம்பரத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோட்டில் தனியார் இருசக்கர வாகனம் விற்பனையகம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையான சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராமல் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. அப்போது பேருந்துகளின் இரண்டு பக்க முன்பக்கமும் நொறுங்கியது. இரண்டு பேருந்து ஓட்டுநர்களுக்கும் கடுமையான காயம் ஏற்பட்டது. மேலும் தனியார் மற்றும் அரசு பேருந்தில் வந்த 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர். சிலர் லேசான காயங்கள் இருந்ததால் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு மருத்துவமனைக்கு போகாமல் தொடர்ந்து தாங்கள் வேண்டிய இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின்
முதற்கட்ட விசாரணையில்  அரசு பேருந்தின் ஸ்டியரிங் ராடு கட்டானதாகவும் அதனால் கட்டுப்பாட்டை
இழந்து அரசு பேருந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதிக் கொண்டதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து பயணிகள் தெரிவிக்கும் போது அரசு பேருந்துகளில் போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொண்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.



சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமத்தில் ஏவிகேஎஸ் பவுண்டேஷன் சார்பில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம்

 





கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே  ஒரத்தூர் கிராமத்தில் கருப்பசாமி வித்யாலயா மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஏவிகேஎஸ் பவுண்டேஷன்,  கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தினர். இந்த முகாமிற்கு நிர்வாக அறங்காவலர் ராணிஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். .பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு முன்னில வகித்தார் . கண்மருத்துவ முகாமை சேத்தியாத்தோப்பு- குறுக்குரோடு விநாயகபுரம் அருள்மிகு கருப்பசாமி சித்தர் பீடம் அருள்வாக்கு சித்தர் ஆறுமுகசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முகாமிற்கு சிறப்பு விருந்தினரர்களாக பெங்களூரு தொழிலதிபர்கள் முனியப்பன், சுப்பிரமணி, தர்மபுரியை சேர்ந்த ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் முகாமில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உஷா, வினிதா உள்ளிட்ட18 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு கண் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.  இந்த முகாமில் கண்மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டனர். இம்முகாமில் ஒரத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். முடிவில் பள்ளி முதல்வர் கோப்பெருந்தேவி மணிவண்ணன் நன்றி கூறினார்.இந்த கண்மருத்துவ பரிசோதனை முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏவிகேஎஸ் பவுண்டேஷன் சார்பில் செய்திருந்தனர்.


Sunday, August 28, 2022

சேத்தியாத்தோப்பில் வெட்ட வெளியில் வெளியேற்றப்படும் கழிவறை நீர். பல மாதங்களாக தேங்கி இருக்கும் கழிவறை நீரால் மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு வரும் குடியிருப்பு வாசிகள். யாரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை






கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி ஏழாவது வார்டு, தங்கராசு தேவர் நகரில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்பு அருகில் பலர் வெட்ட வெளியில் குடியிருப்பில் இருந்து தரையில் பைப் அமைத்து
கழிவறை நீரை பொது வெளியில் வெளியேற்றி வருகின்றனர்.
கடந்த பல மாதங்களாக கழிவறை நீர் வெளியேறி வருவதால் கழிவறை நீர் வெட்டவெளியில் குளம் போல தேங்கி நிற்கிறது.  குடியிருப்பு வாசிகளை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் உணவருந்த முடியாமலும், கொசுக்கடியிலும் அவதிப்பட்டு, மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வெட்ட வெளியில் வெளியேற்றப்படும் கழிவறை நீரை வெளியேற்றப்படுபவர்கள் மீது அதிகாரிகள் இதுவரை  எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இப்பகுதியிலுள்ள 50க்கு மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேதனையோடு கடும் அவதி அ¬ட்ந்து வருகிறார்கள்.இப்பகுதி குடியிருப்புவாசிகள் பலமுறை பலரிடமும் புகாரளித்தும் எவ்விதமான நடவடிக்கை இல்லை என வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். வெட்டவெளி கழிவறை நீரால்
ஒவ்வொரு  நிமிடமும் நரக வேதனை அனுபவித்து வருவதாக கூறும் குடியிருப்பு வாசிகள், குடியிருப்பு பகுதியில் முறையான கழிவுநீர் தொட்டி அமைத்து அதிலேயே கழிவுறை நீரை வெளியேற்ற வேண்டும். இப்படி பொதுவெளியில் வெளியேற்றக்கூடாது.அதையும் மீறி கழிவறை நீரை வெளியேற்றுவதால் இது சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. பலருக்கும் பெரிய வேதனையை தந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த கழிவு நீர் வெளியேறும் பகுதியில  ஏராளமான அளவில் பன்றிகள் மேய்ந்து வருவதால் அப்பகுதியை கடப்பவர்கள் துர்நாற்றத்திலும் பன்றிகள் கடித்து விடுமோ என அச்சத்திலுமே கடக்க வேண்டி உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கண்ணீர்க்தறலோடு  தெரிவித்து வருகிறார்கள்.

Sunday, August 21, 2022

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு களப்பயிற்சி பள்ளி மழவராயநல்லூர் கிராமத்தில் துவக்கப்பட்டது

 






கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமம் உள்ளது.இங்கு உள்ள புகழ் மீன் குஞ்சுகள் பண்ணை அமைந்துள்ளது.இப்பண்ணையின் மூலம் மீன்வளர்ப்போருக்கு அவர்கள் விரும்பும் வகையிலான அனைத்து வகை மீன்குஞ்சுகள் கிடைக்கிறது.மேலும் இங்கு மீன்குஞ்சுகள் விற்பனை செய்வதோடு மட்டும் அல்லாது  அதனை எப்படி பராமரிக்கவேண்டும் மற்றும் மீன்களை எவ்வாறு சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள், வழிக்காட்டுதல்கள்,மீன்கள் வளர்ப்போருக்கு எடுதுக்கூறப்படுகிறது. இவ்வாறு சிறப்புமிக்க புகழ்மீன்குஞ்சுகள் பண்ணையில் தற்போது
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மீன் வளர்ப்பு குறித்த மத்திய அரசின் மீன் வளர்ப்பு களப்பயிற்சி பள்ளி துவக்கப்பட்டது.
ஐசிஏஆர்-சிபா எனப்படும் மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் புவனேஸ்வர் ஒரிசா, மற்றும் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் துவக்கப்பட்டுள்ள இந்த களப்பயிற்சி பள்ளியை
ஐசிஏஆர்-சிபா இயக்குனர் டாக்டர் சுவைன் தலைமை வகித்து திறந்து வைத்தார். இதன் முதன்மை தலைமை அதிகாரி பிகே.சின்கா, கடலூர் மாவட்ட மீன் வளர்ப்பு துறை துணை இயக்குனர் வேல்முருகன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் குமரேசன், விஞ்ஞானிகள் டாக்டர் ப்ரோஸ்கான் மற்றும் டாக்டர் சிவராமன், மீன்வள ஆய்வாளர் சதுரூதீன், மழவராயநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் பிருந்தாவதி வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். புகழ் மீன் குஞ்சுகள் உரிமையாளர் புகழேந்தி அனைவரையும் வரவேற்றார். இப்பள்ளியின் நோக்கமானது தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக துவக்கப்பட்டுள்ள இப்பள்ளியின் மூலம் மத்திய அரசின் ஐசிஏஆர்-சிபா மூலம் நேரடியாக வழிநடத்தப்பட்டு மீன் வளர்ப்புக்கான ஆராய்ச்சி, ஆலோசனைகள், நவீன தொழில்நுட்பங்கள், அதனை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேரடி களப்பயிற்சிகள்,  தமிழ்நாடு மீன்வளத்துறை மூலம் இணைந்து கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் புகழ் மீன்குஞ்சுகள் பண்ணையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மீன் வளர்த்து வருபவர்கள்,புதிதாக மீன் வளர்க்க விரும்புவர்கள் என பலரும் தங்களுக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள்,  களப்பயிற்சி ஆகியவற்றை இப்பள்ளியில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மீன் வளர்ப்பு துறையில் ஈடுபட்டுள்ள மற்றும் புதிதாக மீன் வளர்க்க முயற்சிப்பவர்கள் தகுந்த பலன் அடைய முடியும் எனவும் இப்பள்ளியின் திறப்பு விழாவில் தெரிவிக்கப்பட்டது.குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் மீன்வளர்ப்பில் இறங்குவோருக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் இப்பள்ளியின் மூலம் மழவராயநல்லூர் புகழ்மீன்குஞ்சுகள் பண்ணை செயல்பட்டு வருகிறது என்பதே உண்மை.






Saturday, May 14, 2022

புவனகிரி அருகே ஸ்ரீசக்திவேல் முருகன் கோவில் மகாகும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 





கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.ஆதிவராகநல்லூர் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசக்திவேல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக யாகசாலையில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் கலசங்களுக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், லட்சுமிஹோமம், நவகிரஹ ஹோமம்,வாஸ்து சாந்தி, கூஷ்மாண்ட பிரவேசபலி, பூர்ணாஹூதி தீபாரதணை, கும்ப அலங்காரம்,கடஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள்,அபிஷேகங்கள் நடைபெற்று யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசம் கடம்புறப்பாடு துவங்கி ஊர்வலமாக எடுத்துடுசெல்லப்பட்டு கோவிலை வலம் வந்து புனிதநீர் கலசம் கோவில் கோபுரத்தின்மேல் கொண்டுசெல்லப்பட்டு கலசத்தின்மேல் புனிதநீர் ஊற்றப்பட்டு பல்லாயிரம் பக்தர்கள் சூழ ஸ்ரீசக்திவேல் முருகனுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் முலவருக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீசக்திவேல் முருகனை வணங்கி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.

தமிழக எதிர்க்கட்சித்தலைவர் பிறந்தநாள்விழா கொண்டாட்டம் அதிமுக கவுன்சிலர் ஜெயப்பிரியாரகுராமன் செவிலியர்கள் மருத்துவர்களுக்கு பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிப்பு

 






கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 18 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜெயப்பிரியா ரகுராமன் தமிழக முன்னாள் முதல்வரும்,தமிழக எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாக்கொண்டாட்டத்தை முன்னிட்டு புவனகிரி தாலுக்கா மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுடன் கொண்டாடினார்.கடலூர் மேற்கு மாவட்ட செயலாரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற பிறந்தநாள்விழாக் கொண்டாட்டத்தில்  18வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜெயப்பிரியா ரகுராமன் அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கிவரும் மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி, பிறந்தநாள் கேக்வெட்டி கொண்டாடினார்.பின்னர் செவிலியர்கள் தினத்தை அனைவருக்கும் முன்னிட்டு சிறப்பு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சேத்தியாத்தோப்பில் நவீன வசதிகளோடு என்எஸ்ஜெ மருத்துவமனை திறப்பு.கடலூர் மேற்கு மாவட்ட செயலா£ளரும், புவனகிரி அதிமுக எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் பங்கேற்று திறந்து வைத்தார்





கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு நகரில் புதியதோர் உதயமாக என்எஸ்ஜெ புதிய மருத்துவமனை திறப்புவிழா நடைபெற்றது.இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் பங்கேற்று மருத்துவமனையின் பெயர்ப்பலகை மக்கள் பார்வைக்கு திறந்து வைத்து ரிப்பன்வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்.பின்னர் மருத்துவமனையின் நவீன கருவிகளின் செயல்பாடுகள், உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கேட்டறிந்தார்.இதில் அதிமுகவின் நிர்வாகிகள், பல்வேறு துறையைச்சேர்ந்தவர்,பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.அனைவரையும் என்எஸ்ஜெ மருத்துவமனையின் மருத்துவர் நிஷாந்த் வரவேற்று சிறப்பித்தார்.புதியதாக திறக்கப்பட்டுள்ள என்எஸ்ஜெ மருததுவமனையில் பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம்,எலும்பியல்,பொது அறுவை சிகிச்சை,மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட சிறப்புகளை கொண்டு இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படக்கூடியது.இரத்த அழுத்தம், சர்க்கரைநோய்க்கான சிறப்பு சிகிச்சை, மற்றும் உடல்நலம் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையளிக்கப்படுகிறது.