கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.ஆதிவராகநல்லூர் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசக்திவேல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக யாகசாலையில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் கலசங்களுக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், லட்சுமிஹோமம், நவகிரஹ ஹோமம்,வாஸ்து சாந்தி, கூஷ்மாண்ட பிரவேசபலி, பூர்ணாஹூதி தீபாரதணை, கும்ப அலங்காரம்,கடஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள்,அபிஷேகங்கள் நடைபெற்று யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசம் கடம்புறப்பாடு துவங்கி ஊர்வலமாக எடுத்துடுசெல்லப்பட்டு கோவிலை வலம் வந்து புனிதநீர் கலசம் கோவில் கோபுரத்தின்மேல் கொண்டுசெல்லப்பட்டு கலசத்தின்மேல் புனிதநீர் ஊற்றப்பட்டு பல்லாயிரம் பக்தர்கள் சூழ ஸ்ரீசக்திவேல் முருகனுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் முலவருக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீசக்திவேல் முருகனை வணங்கி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment