உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, August 21, 2022

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு களப்பயிற்சி பள்ளி மழவராயநல்லூர் கிராமத்தில் துவக்கப்பட்டது

 






கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமம் உள்ளது.இங்கு உள்ள புகழ் மீன் குஞ்சுகள் பண்ணை அமைந்துள்ளது.இப்பண்ணையின் மூலம் மீன்வளர்ப்போருக்கு அவர்கள் விரும்பும் வகையிலான அனைத்து வகை மீன்குஞ்சுகள் கிடைக்கிறது.மேலும் இங்கு மீன்குஞ்சுகள் விற்பனை செய்வதோடு மட்டும் அல்லாது  அதனை எப்படி பராமரிக்கவேண்டும் மற்றும் மீன்களை எவ்வாறு சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள், வழிக்காட்டுதல்கள்,மீன்கள் வளர்ப்போருக்கு எடுதுக்கூறப்படுகிறது. இவ்வாறு சிறப்புமிக்க புகழ்மீன்குஞ்சுகள் பண்ணையில் தற்போது
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மீன் வளர்ப்பு குறித்த மத்திய அரசின் மீன் வளர்ப்பு களப்பயிற்சி பள்ளி துவக்கப்பட்டது.
ஐசிஏஆர்-சிபா எனப்படும் மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் புவனேஸ்வர் ஒரிசா, மற்றும் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் துவக்கப்பட்டுள்ள இந்த களப்பயிற்சி பள்ளியை
ஐசிஏஆர்-சிபா இயக்குனர் டாக்டர் சுவைன் தலைமை வகித்து திறந்து வைத்தார். இதன் முதன்மை தலைமை அதிகாரி பிகே.சின்கா, கடலூர் மாவட்ட மீன் வளர்ப்பு துறை துணை இயக்குனர் வேல்முருகன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் குமரேசன், விஞ்ஞானிகள் டாக்டர் ப்ரோஸ்கான் மற்றும் டாக்டர் சிவராமன், மீன்வள ஆய்வாளர் சதுரூதீன், மழவராயநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் பிருந்தாவதி வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். புகழ் மீன் குஞ்சுகள் உரிமையாளர் புகழேந்தி அனைவரையும் வரவேற்றார். இப்பள்ளியின் நோக்கமானது தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக துவக்கப்பட்டுள்ள இப்பள்ளியின் மூலம் மத்திய அரசின் ஐசிஏஆர்-சிபா மூலம் நேரடியாக வழிநடத்தப்பட்டு மீன் வளர்ப்புக்கான ஆராய்ச்சி, ஆலோசனைகள், நவீன தொழில்நுட்பங்கள், அதனை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேரடி களப்பயிற்சிகள்,  தமிழ்நாடு மீன்வளத்துறை மூலம் இணைந்து கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் புகழ் மீன்குஞ்சுகள் பண்ணையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மீன் வளர்த்து வருபவர்கள்,புதிதாக மீன் வளர்க்க விரும்புவர்கள் என பலரும் தங்களுக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள்,  களப்பயிற்சி ஆகியவற்றை இப்பள்ளியில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மீன் வளர்ப்பு துறையில் ஈடுபட்டுள்ள மற்றும் புதிதாக மீன் வளர்க்க முயற்சிப்பவர்கள் தகுந்த பலன் அடைய முடியும் எனவும் இப்பள்ளியின் திறப்பு விழாவில் தெரிவிக்கப்பட்டது.குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் மீன்வளர்ப்பில் இறங்குவோருக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் இப்பள்ளியின் மூலம் மழவராயநல்லூர் புகழ்மீன்குஞ்சுகள் பண்ணை செயல்பட்டு வருகிறது என்பதே உண்மை.






No comments:

Post a Comment