உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, November 2, 2019

சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூடிய எஸ்ஐக்கு பொதுமக்கள் பாராட்டு






சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூடிய எஸ்ஐக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழகத்தில் மீண்டும் ஒரு துயரமான ஆழ்துளை கிணற்றின் உயிரிழப்பு சம்பவம் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு உள்ளாட்சி மற்றும் காவல் துறை உள்ளிட்டவற்றிற்கு சம்மந்தப்பட்ட பகுதிகளில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை கண்காணித்து  மூடும்படி உத்தரவிட்டுள்ளது.மேலும் மூடாமல் வைத்திருப்பவர்களின்மேல் நடவடிக்கையும் எடுக்க அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட வலசக்காடு கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் சோழத்தரம் எஸ்ஐ இளையராஜா ரோந்துபணியின்போது ஆழ்துளை கிணறு ஒன்ற அபாயகரமாக இருந்ததை கண்டார்.அப்போது உடனடியாக அதனை அவரே இறங்கி மண்வெட்டியால் மண்வெட்டிப்போட்டு முழுமையாக மூடினார். இது குறித்து அவர் தெரிவிக்கும்போது நீண்டகாலமாக பயன்பாடற்று இது உள்ளது.இப்பகுதி கிராமபுற பகுதியாக இருப்பதால் பலரும் இதனை கடந்து செல்கிறார்கள்.மேலும் இப்பகுதிக்கு குழந்தைகள் ,சிறுவர்கள் யாரேனும் வரநேர்ந்தால் பேராபத்து ஏற்படும்.அதனால் இருநூறு அடி ஆழமுள்ள இந்த ஆழ்துளை கிணற்றை நாங்களே மூடினோம்.இந்த ஆழ்துளை கிணற்றின் உரிமையாளரை கடுமையாக எச்சரித்தும் உள்ளோம்.தற்போது இந்த ஆழ்துளை கிணறு முழுமையாக மூடப்பட்டுவிட்டது.இதுபோல் வேறு ஏதேனும் உள்ளதா என நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.எஸ்ஐயின் இந்த செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.