கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 18 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜெயப்பிரியா ரகுராமன் தமிழக முன்னாள் முதல்வரும்,தமிழக எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாக்கொண்டாட்டத்தை முன்னிட்டு புவனகிரி தாலுக்கா மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுடன் கொண்டாடினார்.கடலூர் மேற்கு மாவட்ட செயலாரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற பிறந்தநாள்விழாக் கொண்டாட்டத்தில் 18வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜெயப்பிரியா ரகுராமன் அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கிவரும் மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி, பிறந்தநாள் கேக்வெட்டி கொண்டாடினார்.பின்னர் செவிலியர்கள் தினத்தை அனைவருக்கும் முன்னிட்டு சிறப்பு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment