கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இந்த பாலம் இருந்து வருகிறது.இப்பாலம் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.பாலத்தின் வழியாக செல்லும் தண்ணீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு சென்று விவசாயத்திற்கும் மற்றும் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறான நிலையில் இந்த குமாரக்குடி வளைவு பாலத்தின்மேல் செல்லும் சென்னை&கும்பகோணம் சாலை முக்கிய போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.தற்போது இப்பாலம் விரிசல் ஏற்பட்டு பலரையும் அச்சுறுத்தி வருகிறது.இந்த விரிசல் இன்று நேற்று ஏற்பட்டல்ல கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.பாலத்தின் வழியாக சுற்றுப்புற பகுதிகளில் உள்ள முப்பதுக்குமேற்பட்ட கிராமமக்களும், நூற்றுக்கணக்காண வாகனங்களும் செல்வதற்கு பயன்பட்டு வரும் பாலம் குறித்து தற்போது பலரும் வேதனையடைந்துள்ளனர்.ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் அதிகாரிகள் இந்த வளைவு பாலத்திற்கு புதிய பாலத்தினை அமைத்து தரவேண்டும்.அப்போதுதான் இப்பகுதி மக்கள் அச்சமின்றி பயன்படுத்தமுடியும். எவ்விதமான இடையூறும் இல்லாமல் வாகனங்களும் செல்லமுடியும் என்று பலரும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.உடனடியாக அதிகாரிகள் இப்பாலத்தினை ஆய்வு செய்து புதிய தரமான பாலம் அமைக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
Wednesday, July 8, 2020
குமாரக்குடி வளைவு பாலத்தை புதியதாக அமைக்க கோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...