உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, April 11, 2022

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்றக்கூட்டத்திலிருந்து தமிழக அரசின் சொத்து வரி உயர்வைக்கண்டித்து அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் அதிமுக 1வது வார்டு கவுன்சிலர் கார்த்திக்கேயன் உள்ளிட்ட மாற்றுக்கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இதனையடுத்து தமிழக அரசின் சொத்து வரி உயர்வு,காலி மனைவரி உயர்வு உள்ளிட்ட வரியினங்களை செயல்படுத்துவது குறித்த விவாதம் நடைபெற்றது.அப்போது சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அதிமுக ஒன்றாவது வார்டு கவுன்சிலர் கார்த்திக்கேயன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இதனை திரும்பபெறவேண்டும் என கூறியும், மக்களை வாட்டி வதைத்து வரிவசூல் செய்யக்கூடாது எனவும் கூறி, திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்தப்படாது என தெரிவித்திருப்பதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக அரசைக்கண்டித்து மன்றக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
 

No comments:

Post a Comment