உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, March 27, 2022

60 ஆண்டுகளுக்கு பிறகு கூத்தாடும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பு

 



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வடக்கு விருதாங்கன் கிராமம் உள்ளது. இக்கிராமம் வ¬லாற்று சிறப்புமிக்க வீராணம்ஏரிக்கரையின் ஓரம் அமைந்துள்ள கிராமம் ஆகும்.இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள கூத்தாடும் விநாயகர் கோவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து பல்வேறு காரணங்களால் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று வருவது தடை பட்ட நிலையில்,கிராமமக்களால் கடந்த பல மாதங்களாக கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கப்பட்டது. இந்நிலையில் அப் பணிகள் முடிவுற்ற பின் 60 ஆண்டுகளுக்குப் பிறகு கூத்தாடும் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முன்னதாக யாகசாலையில் வைக்கப்பட்ட பல்வேறு புண்ணிய நதிகளின் நீரை கொண்ட புனித நீர் கலசங்களுக்கு அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், ஸ்ரீதனலட்சுமி பூஜை, பிரசன்ன கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்தங்கரணம்,அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீர்க் கலசம் சுமந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. இதன் பிறகு புனித நீர்க் கலசம் கோவில் கோபுரத்தின் மேல் கொண்டு செல்லப்பட்டு  கோபுரத்தின் மேலுள்ள கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 60 ஆண்டுகளுக்குப் பிற்கு நடைபெறும் மகா கும்பாபிஷேகம் என்பதால் கூத்தாடும் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை காண பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு விருதாங்கன் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment