கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சக்திவிளாகம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வழியாக வெள்ளாறு செல்கிறது. இந்த ஆற்றில் கடந்த பலஆண்டுகளுக்கு முன் வெள்ள நீரால் கிராமத்தின்கரை உடைப்பு ஏற்பட்டு கிராமம் மற்றும் வயல்வெளிகளை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் தாழ்வாக இருந்து வரும் கிராமத்தின் வெள்ளாற்றின் கரையை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீரமைத்து வலுவான கான்கிரீட் உயரமான சுவர் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்று சக்திவிளாகம் கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிவையில் தற்போது திடிரென்று வெள்ளாற்றின் கரையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.கிராமத்தில் தாழ்வாக உள்ள 1.5கிலோ மீட்டர் தூரத்திற்கு கரை சீரமைப்பு பணிகளை துவக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே கரை சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர் என கிராமமக்கள் குற்றச்சாட்டினை வைத்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கும்போது இதனால் எந்த பலனும் இல்லை.எங்கள் கிராமத்திற்கு வெள்ள சேதத்திலிருந்து
நிரந்தர பாதுகாப்பு தரவேண்டும் என்றால் கிராமத்தின் முழுமையான பகுதி வரை கரை சீரமைப்பு பணியை மேற்கொண்டு கான்கிரீட் சுவர் அமைத்து தர வேண்டும்.இல்லையேல் ஆற்றில் செல்லும் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் என அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.
Saturday, March 19, 2022
உடைப்பு ஏற்பட்ட ஆற்றின் கரையை முழுமையாக சரிசெய்ய கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment