கடலூர மாவட்டம் சேத்தியாத்தோப்பு பழைய பாலப்பகுதி உள்ளது.இந்த இடம் பூதங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இடமாகவும் இருக்கிறது.இந்நிலையில் இப்பகுதியில் உள்ள இறைச்சிக்கடைகளிலிருந்து வெளியேற்றப்பட்டும்
இறைச்சிக்கழிவுகள், பிளாஸ்டிக் கப்புக்கள், மற்றும்
வெள்ளாற்றுப்பகுதியில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.இவ்வாறுகுப்பைகள், இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுப்புறச்சூழல்சீர்கேடு அடைவதோடு இப்பகுதியை கடக்கும் மக்களுக்கு தொற்றுநோய்
ஏற்படுத்தும் விதத்தில் இருக்கிறது. இவ்வாறான நிலையில் இந்த குப்பைகள் சில தினங்களுக்கு முன் திடிரென அடிக்கடி தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. இதனால் கருமையான புகைமூட்டம்பரவியது.குப்பைகளில் பற்றிய தீயானது அருகிலுள்ள பிளாஸ்டிக் பொருட்கள்,இறைச்சிக்கழிவுகள் போன்றவையும் பற்றி எரிய ஆரம்பித்தது.இதனால் துர்நாற்றம்
வீசத்தொடங்கியது. அருகில் கடைகளும் இருப்பதால் தீப்பற்றும்அபாயமும் ஏற்படுகிறது.இதனைக்கானும் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.தீயை அணைக்க யாரும்முன்வராததால் நீண்டநேரம் எரிந்த தீயானது அதுவாக அனைந்தது.இதுபோன்று அடிக்க நிகழ்வதாகவும், அதிகாரிகள் ஆற்றுப்பகுதியை
தூய்மையாக வைத்திருக்க இப்பகுதியில் குப்பகைள் இல்லாமல் நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனவும் இப்பகுதியினர் தெரிவித்து வருகிறார்கள்.மேலும் சேத்தியாத்தோப்பு வடக்குமெயின்ரோட்டில் உள்ள வடக்குராஜன் வாய்க்கால் கரைகளின் ஓரங்களில்அதிகளவில் இறைச்சிக்கழிவுகள்,குப்பைகள்,பிளாஸ்டிக்கழிவுகள் கொட்டப்படுவதை அதிகாரிகள் தடுத்து தூய்மையான பகுதியாக மாற்றிடவேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment