கடலூர மாவட்டம் கீரப்பாளையம் அருகே சாக்காங்குடி கிராமம் உள்ளது.இக்கிராமத்திலிருந்து கீழ்நத்தம் வரை நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு சில தினங்களுக்கு முன்பு புதியதாக தார்சாலை அமைக்கப்பட்டது.சுமார் 230 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்டதாக கூறப்படும் இந்த சாலை விதிமுறைகள்படி போடப்படவில்லை என இங்குள்ள கிராமமக்கள் தெரிவித்து வருகிறார்கள்.சாலை ஆரம்பிக்கும் இடத்தில் உயரமான சாலையாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், சாலையின் உள்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் உயரம் குறைவாகவும் சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியமாக புதியதாக அமைக்கப்பட்ட சாலையின் இரண்டு பக்க சாலை ஓரங்களில் சாலை அமைக்கும் விதிமுறைப்படி செம்மண்கொண்டு நிரப்பவேண்டும்.அப்போதுதான் சாலை சேதமடையாமல் நிலைத்திருக்கும் எனவும் தற்போது சாலை ஓரங்களில் களிமண்கொண்டு நிரப்பப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ள அவர்கள் மாவட்ட நிர்வாகம் புதியதாக போடப்பட்ட சாலையை ஆய்வு செய்து, சாலை ஓரங்களில் விதிமுறைப்படி செம்மண் கொட்டி சாலையை பாதுகாக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment