உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, March 19, 2022

சேத்தியாத்தோப்பில் வயதான முதியவரிடம் நூதனமுறையில் பணத்தை திருடியவரை தனிப்படை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்

 



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு நகரில் உள்ள இந்தியன் வங்கியில் பூதங்குடி தெற்குதெருவைச்சேர்ந்த 70 வயதான ராமன் என்பவர் தனது வங்கிக்கணக்கிலிருந்து 39 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.அப்போது அவரை நெருங்கிய மர்மநபர் ஒருவர் ராமனிடம் இருந்த 200 ரூபாய் பணத்தாள் கொண்ட கட்டு சரியாக இல்லை என கூறி எண்ணித்தருகிறேன் என வாங்கினார்.பின்னர் மர்மநபர் சாமர்த்தியமாக இருபதாயிரம் ரூபாயை தான் மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள பத்தொண்பதாயிரம் ரூபாயை இரண்டு கட்டுக்கள் கொண்டதாக பிரித்து வைத்து திருப்பி ராமனிடம் கொடுத்துள்ளார். சிறிது தூரம் சென்ற பின்பு எண்ணிப்பார்த்த ராமன் பணத்தை மர்மநபர் சாமர்த்தியமாக திருடியிருப்பதை அறிந்து சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் அளித்தார்.இதனையடுத்து தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்த இருபதாயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment