உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, March 19, 2022

கீரப்பாளையம் அருகே பருவநிலை மாற்றத்தால் 200 ஏக்கர் தர்பூசணி விளைச்சல் கடும் பாதிப்பு விவசாயிகள் வேதனை

 



கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே உள்ளது சக்திவிளாகம் கிராமம்.இக்கிராமத்தில் உள்ள விவசாயிகள் 200 ஏக்கருக்கு மேல் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அவை அறுவடையை நெருங்கியுள்ள நிலையில் பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த  மழையாலும் போதிய விளைச்சல் இல்லாமல்  விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்பூசணி  பயிரில் கடும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்குதலுக்கு  பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் தெளிக்கப்பட்ட நிலையிலும் நோய்த்தாக்குதல் கட்டுப் படுத்தப் படாமல் அதையும் மீறி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நோய் தாக்குதல் ஏற்படுத்தும் பூச்சிகள் மென்மேலும் அதிக அளவில் வளர்ந்து பயிர்களில் பாதிப்படையச் செய்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் விவசாயிகளுக்கு தர்பூசணி விளைச்சல் நல்ல முறையில் இருந்த நிலையில் அப்போது கொரானோ காலகட்டம் என்பதால் போதிய வியாபாரம் இல்லாமல் பெருத்த நஷ்டத்தை சந்தித்தனர். ஆனால் தற்போது இப்பகுதியில் நிலவும் காலநிலை மாற்றம்   பருவமழையால் தர்பூசணி பயிர்கள் முரண்பட்டு பூச்சித்தாக்குதளால் இழப்பு ஏற்பட்டுள்ளன. வழக்கமான செலவினங்களை விட தற்போது ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரத்துக்கும் மேல் செலவு ஏற்பட்டு உள்ளது. ஆனால் வயல்களில் அதற்கான விளைச்சல் இல்லை. இனியும் அவை விளைய போவதும் இல்லை. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் பருவநிலையும், அரசும் விவசாயிகளுக்கு உதவினால் மட்டுமே காப்பாற்ற முடியும். பருவ நிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து விவசாயிகள் தப்பிப்பதற்கு அதிகாரிகள் தகுந்த ஆலோசனை வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.. முக்கியமாக தர்பூசணி சந்தைப்படுத்துவதற்கான வழிகளை நேரடியாக ஏற்படுத்த வேண்டும். தர்பூசணி மதிப்புக்கூட்டி விற்பதற்கு தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள.

No comments:

Post a Comment