உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, March 21, 2022

கீரப்பாளையம் காந்திநகர் உடைந்த பாலத்தை எப்போது அதிகாரிகள் கட்டித்தருவார்கள் என குடியிருப்பு வாசிகள் வேதனையுடன் கேள்வி

 




கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீரப்பாளையம் காந்தி நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு வடிகால் வாய்க்கால் பாலம் வெள்ளத்தினால் உடைப்பு ஏற்பட்டது.பாலம் உடைப்பு ஏற்பட்டதால்  காந்திநகரில் வசித்து வரும் நூறுக்குமேற்பட்ட குடும்பத்தினர் தங்களது இயல்பான வாழ்க்கையை தொடர முடியாமல் பெரும் வேதனை அடைந்து வந்தனர்.பாலம் உடைப்பு ஏற்பட்டதால் நகருக்குள் அவசரகால வாகனங்களான தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் வரமுடியாதநிலை இருந்து வருகிறது.
இதனை ஊராட்சி  ஒன்றிய அதிகாரிகளிடம் சரிசெய்ய பலமுறை இப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ள நிலையில் அவர்கள் மௌனம் காத்து வருவதாக  இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு இங்குள்ள குடியிருப்பு வாசிகள் கீரப்பாளையம் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உடடைப்பு ஏற்பட்ட பாலத்தின்பகுதியில் மணல்மூட்டைகளை தற்காலிகமாக அடுக்கி பயன்படுத்தி வருகிறார்கள்.இது நிரந்தர தீர்வு இல்லை எனவும், உடனடியாக இவ்விடத்தில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் எனவும் தெரிவிக்கும் குடியிருப்பு வாசிகள் காந்திநகரில் சரிவர குடிநீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது என வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment