உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, March 21, 2022

சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு, புவனகிரி பங்களா பேருந்து நிறுத்தப்பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் சென்னை&கும்பகோணம் சாலை, புவனகிரி&விருத்தாசலம் சாலை ஆகிய நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருக்கிறது.இப்பகுதியில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் அதிக ஆபத்து நிறைந்த பகுதியாகவும் இருக்கிறது.இப்பகுதியில் கடக்கும் வாகன ஓட்டிகள் அதிக வேகமாக கடந்து வருவதால் எதிரே, மற்றும் பக்கவாட்டு ரோட்டில் வரும் வாகனங்களை சரியாக கவணிக்காமல் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.ஏற்கெனவே கும்பகோணம் சாலைப்பகுதியிலும், சென்னை சாலைப்பகுதியிலும் உயரமான வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் வேகம் குறைவாகவும் ஆபத்தில்லாமலும் செல்கின்றன.இந்நிலையில் புவனகிரி&விருத்தாசலம் சாலையில் புவனகிரி செல்லும் சாலையிலும், விருத்தாசலம் செல்லும் சாலைப்பகுதியிலும் உயரமான வேகத்தடை அமைத்திடவேண்டும் எனவும் இதனால் இப்பகுதியில் வாகனங்கள் விபத்தில்லாமல் கடக்கமுடியும் எனவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் எனவும் இப்பகுதியினர் தெரிவித்து வருகிறார்கள். இதுபோல் புவனகிரியில் பங்களா பேருந்து நிறுத்தப்பகுதியில் புவனகிரி&குறிஞ்சிப்பாடி சாலை, விருத்தாசலம்&புவனகிரி சாலை உள்ளிட்ட பல சாலைகள் சந்திக்கும் முக்கிய இடமாக இருந்து வருவதால் இப்பகுதியில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் புவனகிரி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி செல்லும் சாலை ஆகிய மூன்று இடங்களில் உயரமான வேகத்தடை அமைத்தால் மட்டுமே இப்பகுதியில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள்  சாலையை அச்சமின்றியும், விபத்துக்களின்றியும் கடக்கமுடியும் எனவும் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment