உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, March 24, 2022

சேத்தியாத்தோப்பு அருகே பள்ளிச்சுவற்றின் அருகில் இருந்த பழமையானபுளியமரம் திடிரென விழுந்ததால் பரபரப்பு

 



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமத்தில்
சிதம்பரம்-சேத்தியாத்தோப்பு சாலையின் அருகில் அரசு உதவிபெறும் பள்ளிஅமைந்துள்ளது.இப்பள்ளியின் சுவற்றின் வெளிப்பக்கத்தில்
ஐம்பதாண்டுகளுக்குமேற்பட்ட பழமையான புளியமரம் இருந்து வந்தது.இந்தபுளியமரமானது திடிரென்று நேற்று மாலை விழுந்தது.இதனால் அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது.புளியமரமானது பள்ளிச்சுவற்றுக்கும் அருகிலுள்ளமின்கம்பத்திற்கும் இடையில் விழுந்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம்தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவிக்கும்போதுஇப்புளியமரம் விழுவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் பள்ளிக்கூடம்
விடப்பட்டு மாணவர்கள் பள்ளியைவிட்டு வெளியேறினார்கள்.மேலும் மரமானதுசாலையில் விழுந்திருந்தாலும் மிகப்பெரிய ஆபத்து
ஏற்பட்டிருக்கும்.நல்லவேலையாக மரம் சாமர்த்தியமாக தானகவே விழுந்துள்ளதுஎன அதிர்ச்சியோடு தெரிவித்தனர்.மேலும் அவர்கள் தெரிவிக்கும்போதுசிதம்பரம்&சேத்தியாத்தோப்பு சாலையில் பல்வேறுஇடங்களில் இதுபோன்று வயதானபழமையான புளியமரங்கள் இருந்து வருகின்றன.இதனை நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள் கணக்கெடுப்பு செய்து ஆபத்து ஏற்படும் என தெரியவரும் மரங்களைமுன்கூட்டியே வெட்டிடவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவைத்தனர்.முக்கியமாக  ஒரத்தூர் பள்ளி சுவற்றின் அருகில் விழுந்த ஆபத்தான புளியமரத்தை விழுந்து இரண்டு நாட்களாகியும் அதிகாரிகள் அகற்ற முன்வராததுவேதனையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment