உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, March 18, 2022

புகழ்பெற்ற அம்பாள்புரம் ஸ்ரீ செல்லியம்மா கோவில் தேரோட்டம் சிறுவர்கள்,பெரியோர் என ஆயிரக்கணக்கானவர்கள் வடம்பிடித்து இழுத்து கோலாகல கொண்டாட்டம்

 





கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அம்பாள்புரம் கிராமத்தில்  புகழ்பெற்றஸ்ரீ செல்லியம்மா கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பங்குனி உத்திரதிருவிழாவை முன்னிட்டு ஸ்ரீசெல்லியம்மா அலங்கரிக்கப்பட்ட 40 அடிஉயரதேரில் அமர்ந்து மங்கள வாத்தியாத்தியங்கள் முழங்க பக்தர்களுக்குகாட்சியளித்து அருளாசிகளை வழங்கினார். கிராமத்தின் பலவீதிகளில் வலம்வந்த
தேரை சிறுவர்கள்,பெரியோர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்றாக கூடி வடம்பிடித்து இழுத்து சென்றனர்.இந்த அம்பாள்புரம் புகழ்பெற்ற
தேர்திருவிழாவைக்கான அம்பாள்புரம்,
தலைக்குளம்,உளுத்தூர்,பின்னலூர்,கரைமேடு,கொளக்குடி,மருதூர்,புவனகிரி  எனபல்வேறு சுற்றுப்புற பகுதி கிராமமக்களும், வெளியூர் பக்தர்களும் வருகைதந்த ஸ்ரீசெல்லியம்மா தேர்விழாவை கண்டு தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment