கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி வரலாற்று சிறப்புமிக்க ஏரியாக இருந்து வருகிறது.17 கிலோமீட்டர் நீளமும், நான்கு கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஏரியாகவும், 44,856 ஏக்கர் விவசாய விளைநிலங்களுக்கு பாசனம், குடிநீர்க்கு உதவி வருகிறது.இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஏரியானது தற்போது மதுப்பாட்டில், பிளாஸ்டிக், பல்வேறு குப்பைகளால் தன்னுடைய வலிமையை இழந்து வருகிறது.தினசரி பலர் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்திவிட்டு மதுபாட்டில், பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை ஏரிக்குள் வீசி வருகிறார்கள்.இது மட்டும் அல்லாமல் ஏரியின் கரையோரம் உள்ள மக்கள் சிலர் தங்களது குப்பைகளை ஏரிக்குள்ளே கொட்டியும் வருகிறார்கள்.இதனால் ஏரியின் உள்ளே கண்ணாடி பாட்டில்கள்,பிளாஸ்டிக் குப்பைகள் தங்கி ஏரியை மாசடையவைக்கிறது.வருங்காலங்களில் ஏரியின் நீர்பிடிப்புத்திறன் அளவும் இதனால் குறைந்து பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.உடனடியாக இதனை அதிகாரிகள் அகற்றிடவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.முக்கியமாக 1200 ஆண்டுகள் பழமையான வீராணம் ஏரியை முழுமையாகவும், ஆழமாகவும் தூர்வார வேண்டும் என விவசாயிகள்,பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment