உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, March 18, 2022

வலசக்காடு பாண்டியன் ஏரியில் அமைந்துள்ள பழையபாலத்தினை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டுவது எப்போது? பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் கேள்வி


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வலசக்காடு கிராமத்தில் பாண்டியன் ஏரியில் பழைமையான சேதமடைந்த பாலம் அமைந்துள்ளது.இந்தப்பாலம் வலசக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களையும், அருகே உள்ள பாளையங்கோட்டை ஸ்ரீமுஷ்ணம் ஆண்டிமடம் பகுதியையும் இணைக்கும் முக்கிய பாலமாக இருந்து வருகிறது. இந்த பாலத்தின் வழியாக பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனம் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் என பலவும் பயன்படுத்தி சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக பாலம் சேதமடைந்துள்ளதை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் புதிய பாலம் இதுவரை கட்டப்படாமல் இருக்கிறது.இந்நிலையில்
உடைந்து விழும் நிலையில் உள்ள பழைய பாலத்தை தற்காலிகமாக சீரமைத்து உள்ளனர். இதனால் எவ்விதமான பலனும் இல்லை எனவும் உடனடியாக பாண்டியன் ஏரியில் அமைந்துள்ள பழைய சேதமடைந்த  பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment