உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, March 20, 2022

சேத்தியாத்தோப்பில் சாலையோர பள்ளஙஙகளால் தொடரும் விபத்துக்கள்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் முக்கிய சாலையாக சென்னை-கும்பகோணம் சாலை செல்கிறது.இந்த சாலையில் இரவு பகல் என எல்லா நேரங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இவ்வாறான நிலையில் இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த சாலை ஓரங்களில் இரண்டடிக்குமேல் பள்ளங்கள் இருந்து வருகின்றன.இப்பள்ளங்களால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் என பலரும் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.சுமார் இரண்டு கிலோமீட்டர்தூரம் வரை இந்த சாலையோர பள்ளங்கள் நீண்டநாட்களாக சரி செய்யப்படாமல் இருந்து வருகிறது.இதனால் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர்த்தேங்கி அது முக்கியச்சாலையையும் சேதப்படுத்தி வருகிறது.சாலையோர பள்ளங்களை சரிசெய்ய பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள்இதனை கவனத்தில் கொள்ளவில்லை.முக்கியமாக சாலையோர பள்ளங்களை சரிசெய்வதில் எல்லைப்பிரச்னையும் இருந்து வருவதாக இப்பகுதி மக்கள்,வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து அவர்கள் தெரிவிக்கும்போது சாலை என்பது நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் வருவதாகவும், சாலைக்கு அருகில் உள்ள பள்ளப்பகுதியானது சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் இருக்கிறது.இதனால் யார் இந்த ஆபத்தான விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்களை சரிசெய்வது என்ற பிரச்னை பலநாட்களாகவே தொடர்ந்து வருவதாகவும் இதனால்தான் அவை சரிசெய்யப்படாமல் இருந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.மேலும் எல்லைப்பிரச்னையை ஓரம் வைத்துவிட்டு உடனடியாக சேத்தியாத்தோப்பு பகுதியில் செல்லும், சென்னை-கும்பகோணம் சாலையின் ஓரங்களில் இருக்கும் பள்ளங்களை இருவரும் இணைந்தே சரிசெய்தால் நன்றாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனால் விபத்துக்களை தவிர்க்கவும் முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment