உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, March 20, 2022

புவனகிரி பகுதியில் 2000 ஆயிரம் மாட்டுவண்டித்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

 
கடலூர் மாவட்டம் புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், ஒரத்தூர், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள்  வசித்து வருகின்றனர். இவர்கள்  கடந்த பலமாதங்களாக மாட்டுவண்டிக்கான மணல்குவாரி திறக்கப்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் மாட்டுக்கான தீவணம் வாங்க கூட காசில்லாமல் தவித்து வருகின்றனர்.மாடுகளுக்கான தீவணம் மற்றும் மருத்துவம், மாட்டுவண்டி பராமரிப்பு செலவுகள் என ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் வரை செலவாவதால் வேதனையில் தத்தளித்து வருகிறார்கள்.
கடந்த பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளதால் குடும்பத்தின் செலவினங்களுக்கு பிறரிடம் கடன்வாங்கி செய்யவேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர்.வேறு வேலையும் தெரியாததால் தினசரி பல லட்சரூபாய் மதிப்புள்ள மாடுகளையும், வண்டியையும் பராமரித்து வருவதையே வேலையாக வைத்துள்ளனர்.
மாட்டுவண்டித்தொழிலாளர்கள் கடந்த காலங்களில் அருகில் செல்லும் வெள்ளாற்றில் அரசு அனுமதிப்பெற்று மணல்குவாரி திறக்கப்பட்டு மணல் எடுத்து விற்பனை செய்தனர்.இதனால் குறைந்த செலவில் வீடுகள் கட்டும் ஏழை எளியோர்க்கு  விலைகுறைவாக மணலை கொடுக்கமுடிந்தது. ஆனால் இப்போதைய நிலையில் லாரிகளில் ஒருலோடு மணல் முப்பதாயிரம், நாற்பதாயிரம், கொடுத்து வாங்க முடியாமல் வீடுகட்டுவோரின் கட்டுமான பணிகளும் பாதிப்பு அடைந்துள்ளது.இதனால் கொத்தனார்,சித்தாள் என பலரும் கடுமையாக வேலைவாய்ப்புகளை இழந்திருக்கின்றனர்.முக்கியமாக தற்போது பல இடங்களிலும் வருவாய்த்துறையின்மூலம் ஆற்றுப்பகுதிகளில் லாரிகளில் மணல் எடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதலில் அதிகாரிகள் 2000 ஆயிரத்திற்குமேற்பட்ட மாட்டுவண்டித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கவும் வழிஏற்படுத்த உடனடியாக மாட்டுவண்டிக்கான மணல்குவாரி திறக்கவும் கோரிக்கை அவர்கள் கண்ணீரோடு கோரிக்கை வைத்துள்ளனர்.





No comments:

Post a Comment