உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, March 18, 2022

சேத்தியாத்தோப்பில் பாழடைந்த அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை இடிக்க கோரிக்கை, காலதாமதம் ஆவதால் பொதுமக்கள் கவலை

 




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகம் அருகில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி அமைந்துள்ளது. கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்தது. இதில் முந்றூறுக்குமேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வந்தனர்.இந்நிலையில் இந்த மாணவர் நலவிடுதி கட்டிடம் சேதமடைந்துள்ளதாலும், அவ்வப்போது கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் இடிந்து விழுந்து மாணவர்களையும், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரையும் அச்சுறுத்தி வந்ததாலும் தற்போது இதில் மாணவர்கள் தங்கவில்லை.வேறு தற்காலிக இடத்தில் தங்கவைக்கப்பட்டு கல்வி பயின்று வருகிறார்கள். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பலரையும் அச்சுறுத்தி வரும்  மாணவர்விடுதியை இடிப்பதற்கு சுமார் இரண்டு கோடிரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது வரை இக்கட்டிடம் இன்னமும் இடிக்காமல்  இருந்து வருவதாக இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினை வைத்து வருகிறார்கள்.கட்டிடம் அமைந்துள்ள இப்பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த குடியிருப்பு,அரசு அலுவலகங்கள் என உள்ள பகுதியாக இருக்கிறது.இக்கட்டித்தை அகற்ற பலமுறை கோரிக்கை வைத்துள்ள நிலையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிராபத்துக்கள் ஏற்படுமுன் இதனை இடித்து அகற்றிவிட்டு ஒருங்கிணைந்த புதிய அரசு அலுவலகங்கள் அமைக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முக்கியமாக இக்கட்டித்தில் விஷவண்டுகளும் கூடுகட்டி தங்கியிருப்பதால் இது பலருக்கும் மேலும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment