உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, March 18, 2022

காட்டுமன்னார்கோவில் அருகே மானியம்ஆடூர் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் கிராமமக்கள் அவதி.

 



கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மானியம்ஆடூர் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை பார்க்கலாம். அதிக மின்சாரம் செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் பலமுறை மின்கசிவால் தீவிபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் கிராமத்திற்குள் எந்த வாகனங்கள் உள்ளே வருவதாக இருந்தாலும் மின்கம்பிகளை உரசியவாறு வருகின்றன.மேலும் கிராமத்திற்குள் அவசரகால வாகனங்கள் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், உள்ளிட்ட மற்ற கனரக வாகனங்கள் வருவதாக இருந்தாலும் வாகனங்கள் வந்து, செல்லும் வரை கிராமத்தின் மின்சாரத்தை நிறுத்திவிட்டுதான் உள்ளே வந்து செல்கின்றன.இதனால் கிராமத்தில் சுமார் ஒரு மணிநேரத்திலிருந்து இரண்டுமணிநேரம் வரை அவ்வப்போது மின்சார  தட்டுப்பாடும் இதனால் ஏற்படுகிறது.அதை விட கொடுமையாக கூரை வீடுகளில் வசிப்போர், மாடிவீடுகளில் இருப்போர் வீடுகளை உரசியப்படி செல்லும் தாழ்வான மின்கம்பிகளால் எப்போது எண்ண நேருமோ என அச்சத்துடனே இருந்து வருகிறார்கள்.மின்கம்பிகள் தாழ்வாக இருப்பதுபோலவே கிராமத்தில் பல இடங்களிலும் சாலைகளில்தான் மின்கம்பங்கள் புதைக்கப்பட்டுள்ளன.மின்கம்பங்களை சரியான உயரத்தில், இடத்தில் அமைத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயரமாக மாற்றியமைக்கவேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து
காலம் கடத்தி வருவதாக மானியம்ஆடூர் கிராமத்தினர் தெரிவித்து வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இக்கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றிட உதவவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment