கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சி.ஆலம்பாடி, பூ.மணவெளி வழியாக முரட்டு வாய்க்கால் எனும் பெயரில் வாய்க்கால் ஒன்று செல்கிறது.இந்த வாய்க்கால் சுமார் இருபது கிலோமீட்டர் தூரமுள்ளது.இந்நிலையில் வாய்க்கால் செல்லும் மொத்த தூரத்திற்கும் தூர் வாராமல் போனதால் வாய்க்காலில் ஆகாயத்தாமரை,கோரைகள்,முள் மரங்கள் என சூழ்ந்துள்ளது.இந்த முரட்டு வாய்க்கால் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்காலாகவும் இருக்கும் நிலையில் வாய்க்காலில் மழைக்காலத்தில் மழை வெள்ள வடிகால் நீர் பத்தாயிரம் கன அடிக்கு மேல் செல்லும்.அப்போது வாய்க்காலில் செல்லும் மழைநீர் வாய்க்கால் தூர்ந்துள்ளதால் தொடர்ந்து செல்ல முடியாமல் அருகில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கும் புகுந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.இந்நிலையில் வாய்க்கால் தூர் வார வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கூறிவந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை கவனத்தில் கொள்ளாமல் தற்போது மேம்போக்காக வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை யை மட்டுமே அகற்றி வருவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முரட்டு ரவாய்க்கால் முழுமையாக தூர் வாராமல் போனால் விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தும்.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெயரளவிற்கு செயல்படாமல் முரட்டு வாய்க்கால் மொத்த தூரத்திற்கும் தூர்வாரி கரைகளை பலப்படுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இருபதாண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு,...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூடிய எஸ்ஐக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழகத்தில் மீண்டும் ஒரு துயரமான ஆழ்து...
No comments:
Post a Comment