கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பின்னலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வாலாஜா ஏரிக்கரையோரம் விவசாயிகள் சம்பா, குறுவை, தாளடி என மூன்று போகமும் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகளின் விளை நிலங்களுக்கு அருகில் விக்கிரவாண்டி தஞ்சை சாலை விரிவாக்க பணி செல்கிறது. சாலை செல்லும் பகுதியை தவிர்த்து அதே பகுதிகளில் சுமார் நூறு ஏக்கர்க்கு மேல் விவசாய
விளைநிலங்களில் விவசாயிகள் தொடர்ந்து பயிர் செய்து வருகின்றனர் . இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு அம்பாள்புரம் பாசன வாய்க்கால் மூலம் பாசனம் பெற்றனர்.தற்போது நான்கு வழிச்சாலைப்பணியால் பாசன வாய்க்கால் மூடப்பட்டு விட்டன.இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடப்பு சம்பா நடவு பணிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கு காலம்காலமாக பயன்படுத்தி வந்த பாசன வாய்க்கால் மூடப்பட்டு உள்ளதை அறிந்த விவசாயிகள் இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் மனம்துவளாமல் தங்களது விளைநிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் தேவை என்பதை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பலரிடமும் மீண்டும் மனு அளித்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்து தற்போது கட்டாந்தரையாக மாறியுள்ள விவசாய விளை நிலத்திற்கு பாசன வாய்க்காலை தூர் வாரி தந்திட வேண்டும். அப்போதுதான் தங்களால் தடைபட்ட விவசாயத்தை தொடர்ந்து செய்ய முடியும் எனவும்,இல்லையெனில் இந்த 100 ஏக்கர் விவசாய நிலம் எதற்கும் லாயக்கற்றதாக மாறிவிடும் எனவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர் அதிகாரிகள் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும் கண்ணீரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
Wednesday, October 6, 2021
விளைநிலத்தில் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை சாலை பணியால பாசன வாய்க்காலை மறைத்த அதிகாரிகள் பாசனத்திற்கு வாய்க்காலை தூர் வாரிட அதிகாரிகளுக்கு விவசாயிகள் கண்ணீரோடு கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment