உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, October 6, 2021

புவனகிரி ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர்க்கு சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தீவிர வாக்கு சேகரிப்பு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

 

கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றிய 11-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக வெற்றி வேட்பாளர்  இராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.வருகின்ற 9ஆம்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி எம்எல்ஏவுமான அருண்மொழிதேவன்  தலைமையில் 11வது வார்டு க்கு உட்பட்ட வத்திராயன்தெத்து கிராமத்தில் உள்ள பச்சை வாழியம்மன்கோவிலில் வேட்பாளர், பொதுமக்கள், அதிமுக வினருடன் சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அதிமுக வெற்றி வேட்பாளர் ராதாகிருஷ்ணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.பிறகு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வேட்பாளருடன் சென்று அதிமுக அரசின் பத்தாண்டு சாதனைகளை கிராம மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது ஆண்களும் பெண்களும் என அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர்.இந்த வாக்கு சேகரிப்பின் போது மாவட்ட அம்மாபேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி செயலாளர் வீரமூர்த்தி, மாநில எம்ஜிஆர்மன்ற துணை செயலாளர் முருகுமணி,முன்னாள் எம்எல்ஏக்கள் சிவசுப்பிரமணியன், நாக.முருகுமாறன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சி.என்.சிவப்பிரகாசம்,விநாயகமூர்த்தி,சீனுவாசன்,கருப்பன், மருதைமுனுசாமி,சின்னரகுராமன்,முன்னாள் ஊராட்சி கழகசெயலாளர் ஜெயசீலன்,
நகரகழக செயலாளர்கள் புவனகிரி செல்வகுமார்,சேத்தியாத்தோப்பு எஸ்ஆர் மணிக்கண்டன், நிர்வாகிகள் எஸ்கே நன்மாறன்,சுகந்தி ஆசைத்தம்பி,நந்தினிபிரபாகரன்,
ஒன்றிய கவுன்சிலர்கள் லதாராஜேந்திரன்,அஞ்சம்மாள் பாஸ்கரன்,தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகிகள் புருஷோத்தமன்,முத்தமிழ்செல்வன்,சபரிராஜன்,
ஒன்றிய கவுன்சிலர்கள்,கழக நிர்வாகிகள் என் ஏராளமானவர்கள் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



 


No comments:

Post a Comment