உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, July 19, 2021

சேத்தியாத்தோப்பு பகுதியில் குரங்கு தொல்லையால் குடியிருப்பு வாசிகள் அவதி, கூண்டுவைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

MUNKEY


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகளின் வரவால் குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சேத்தியாத்தோப்பபு அரசு மருத்துவமனை,பழையபாலம்,பொதுப்பனித்துறை அலுவலகம்,சேத்தியாத்தோப்பு காவலர் குடியிருப்பு, பாழ்வாய்க்கால் பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்பு என பல்வேறு இடங்களில் குரங்குகள் நூற்றுக்கணக்கில் இருப்பதால் இதனால் குடியிருப்புவாசிகள் மட்டும் அல்லாது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் பாதிப்பு அடைகிறார்கள்.மேலும் இவைகள் ஹோட்டல்கள், குடியிருப்புகளினுள் நுழைந்து அரிசி, உணவுப்பொருட்கள் என எடுத்துக்கொண்டு சேதப்படுத்துகின்றன.அரசு மருத்துவ மனை வளாகத்திலும், கோவில்களிலும் இவை அதிகளவில் இருந்து வருவதால் இவைகளால் ஏற்படும் பாதிப்பின் தன்மை அதிகரித்து வருகிறது.மேலும் இவை போக்குவரத்து நிறைந்த சாலைகளில் அதிகளவில் குறுக்கும் நெடுககுமாக செல்வதால் பல்வேறு வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கவும் நேரிடுகிறது என பலரும் தெரிவிக்கிறார்கள்.இவற்றை கட்டுப்படுத்த குரங்குகளை கூண்டுவைத்து பிடிக்கவேண்டும் அல்லது குரங்குகளுக்கு என தனியான சரணலயம் ஏற்படுத்தி அவற்றினை பராமரிக்கவேண்டும்.இதனால் அவைகளின் வெளி நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment