கடலூர் மாவட்டம், புவனகிரி புதிய வெள்ளாற்று பாலத்தின்
அருகில் நாளுக்கு நாள் உயர்த்தி வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற, ஆட்டோவிற்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை
குறைத்தல்,ஆட்டோவிற்கான கடன் தவணைக்காலத்தை அதிகரிக்கவேண்டும்,கூடுதல் வட்டியை தள்ளுபடிசெய்தல், ஆட்டோவிற்கான பர்மிட் புதுப்பித்தல் காலத்தை அதிகரிக்கவேண்டும், ஆட்டோ தொழிலாளர்களின் நலன்காத்திட மாதம் ரூ.7,500 என ஆறுமாதத்திற்கு வழங்கிடவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் புவனகிரி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தாலுக்கா சிஐடியூ தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை,பெரியபட்டு, முட்லூர் மற்றும் சிதம்பரம் பகுதி ஆட்டோ சிஐடியூ உறுப்பினர்கள் , ஆட்டோ தொழிலாளர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.போக்குவரத்து நிறைந்த பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் ஒருமணிநேரத்திற்குமேலாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
No comments:
Post a Comment