உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, July 22, 2021

இயற்கைமுறையில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்து உள் மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

traditional farming methods

traditional farming methods

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டார வேளாண்மை துறை சார்பில் கே.ஆடூர் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிர் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் கென்னடி ஜெபக்குமார் தலைமை வகித்தார். கீரப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா, துணை வேளாண்மை அலுவலர் கோபி, சீர்காழி இந்திய அறிவியல் பாரம்பரிய நிலையம் திட்ட இயக்குனர் சுபாஷிணி, மணிகண்டன், கே.ஆடூர் ஊராட்சி மன்றத்தலைவர் தணிகைவேல் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்புரையாற்றிய பேசிய மத்தியத் திட்டக் கென்னடி ஜெபக்குமார் பேசும்போது இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி மூலம் அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுக்க முடியும், மண் வளத்தைப் பாதுகாக்க முடியும், இதன் மூலம் அனைவருக்கும் நஞ்சில்லாத உணவுகள் கிடைக்கும், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் அதனால் அனைவரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்து அதனை சாகுபடி செய்து மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கவும் இயற்கை முறையிலான விவசாயம் அவசியம் அனைவரும் செய்யவேண்டும்.ஒரு தகவலின்படி நமது முன்னோர்கள் சுமார்  இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பாரம்பரிய நெல்ரகங்களை பயிரிட்டு வந்ததாக கூறப்படுகிறது.ஆனால் நாம் தற்போது சொற்ப அளவில்தான் மீட்டு வருகிறோம்.அதனால் அனைத்து விவசாயிகளும் பாரம்பரிய விவசாயத்தின்மூலம் பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுக்கவேண்டும் என வேண்டுகோளையும் வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயி சிவகுமார் தான் செய்து வரும் விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் அதன் சாகுபடி முறைகள் அதனால் மண்ணுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை வழங்கினார். இந்தப் பயிற்சி முகாம் ஆலோசனைக் கூட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலர் புகழேந்தி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தசெல்வி,உதவி தொழில்நுட்ப மேலாளர் தேவேந்திரன், சரவணன் அறுவடை பரிசோதகர் பிரேம்குமார், கண்ணங்குடி சேரன், பாரம்பரிய விவசாயிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் விவசாயிகளுக்கான திருந்திய நெல் சாகுபடி முறைகள் குறித்து விளக்க கையேடு வழங்கப்பட்டது

No comments:

Post a Comment