கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றிய பகுதிகளில் கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜீ கிரியப்பனவர் ஆய்வு மேற்க்கொண்டார். கீரப்பாளையம் ஊராட்சியில் ஆய்வுப்பணியை துவக்கிய அவர் கீரப்பாளையம் ஊராட்சியில் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தும்விதத்தில் 20 லட்சம் மதிப்பில் செயல்படுத்த இருக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் உடனடியாக அதனை பயன்பபாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அதே கிராமத்தில் புதியதாக கட்டி வரும் அங்கன்வாடி மையத்தின் கட்டிட பணி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 100 நாள் வேலை பணிகளை பார்வையிட்ட அவர் அப்போது பணியில் ஈடுபட்டு வருபவர்களின் விவரங்களை கேட்டறிந்து பரிசோதித்ததார்.பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அவர்களால் முடிகின்ற பணிவழங்கவும் உத்தரவிட்டார். இதனையடுத்து சாக்காங்குடி ஊராட்சியில் பழுது நீக்கி புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், கிராமபொதுசுகாதாரத்தினை மேம்படுத்திட உதவிடும் வகையில் பொதுக்கழிவறை கட்டுமானப்பபணிகளையு-ம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் இதுபோல் சேதியூர்,வாழைக்கொல்லை,கண்ணங்குடி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், சீனிவாசன் உதவி கோட்ட பொறியாளர் குமுதா, உதவி திட்ட அலுவலர் சேகர், உதவி பொறியாளர் பூவராகவன்,வட்டார ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன், கே.ஆடூர் ஊராட்சி மன்ற தலைவர் தனிகைவேல்,கண்ணங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜேஷ்கண்ணன்,சாக்காங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சிவப்பிரபாகரன் தென்ஹரிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் இனியன், வாழைக்கொல்லை ஊராட்சிமன்றத்தலைவர் ஜெயந்திகுறளசன்,சேதியூர் ஊராட்சிமன்றத்தலைவர் கிருஷ்ணராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், ஊராட்சி செயலர்கள் தேவதாஸ்,உத்திராபதி, அன்புச்செல்வன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment