கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே எறும்பூர் கிராமத்தில் கிராமங்கள் தோறும் பசுமைக்காடுகளை உருவாக்கும் விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சேத்தியாத்தோப்பு இந்தியன் வங்கி மேலாளர் வசந்தகுமார் பங்கேற்று விதைப்பந்து தூவி துவக்கி வைத்தார்.இதில் புளியங்கன்று விதைகள் கிராமத்தின் பல இடங்களிலும் தூவப்பட்டது.இதனை தனியார் அமைப்பு சார்பில் எறும்பூர் ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தியது.இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கும்போது தற்போது அனைவரும் ஏதாவது ஒருவகையில் பயனுள்ள விதைப்பந்துகளை விதைத்து வருகிறார்கள்.இதுபோன்று விதைப்பந்துகள் பசுமைக்காடுகளை உருவாக்கிடும்போது அதனால் பூமிக்கு அதிகப்பலன் கிடைக்கிறது.அதுபோல் அதற்கு காரணமான மனிதர்களுக்கும் அக்காடுகள் உதவிடும் வகையில் இப்போது நாங்கள் புளியங்கன்று விதைகளை விதைப்பந்துகளாக்கி தூவி வருகிறோம்.இதுபோல் பல்வேறு பலன்தரும் மரக்கன்று விதைகளையும் தூவி வருகிறோம்.இதனால் மண்ணுக்கும்,மனிதர்களுக்கும் ஒரே நேரத்தில் நன்மை கிடைக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதாஸ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலர் பாலகணபதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சட்டப் பஞ்சாயத்து பாலமுருகன், மகளிர் அணி பாக்கியலட்சுமி,செல்வராணி, இளைஞரணி
ஞானபார்த்திபன் விடியல் புஷ்ப சௌரிராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment