கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது வானமாதேவிகிராமம்.இக்கிராமத்தில் வீராணம் ஏரிக்கரையோரம் 1200 ஆண்டுகள் பழமையானசோழர்கால பேசும் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.கோவில் மிகவும் சேதமடைந்துமுட்புதர்கள் சூழ்ந்து அச்சமூட்டும் விதத்தில் இருந்து வருகிறது.கடந்தபத்தாண்டுகள் முன்பு வரை எப்பவாவது ஒருநாள் பூஜைகள் நடைபெற்ற வந்த கோவில்தற்போத மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறது.இக்கோவில் குறித்துவானமாதேவி கிராமமக்கள் தெரிவிக்கும்போது கடந்த 1200 ஆண்டுகளுக்கு முன்புவீராணம் ஏரி உருவாக்கம் செய்யப்பட்டபோது சோழர்கள் வழிபடுவதற்கு இந்தபேசும்பெருமாள்பேசும்பெருமாள் கோவில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.மிகவும்சக்திவாய்ந்த தெய்வமான பேசும்பெருமாளை வணங்கிய அவர்கள் வீராணம் ஏரிஉருவாக்கம் செய்யப்பட்டதை கண்காணித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கலைநுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட இக்கோவிலில் அந்தக்காலத்தில் பல்வேறுவிழாக்கள் நடத்தி தங்களது கலாச்சார பண்பாட்டை சோழர்கள்வெளிப்படுத்தியுள்ளனர்.கோவிலின் கட்டிடம் உடைந்து நொறுங்கிப்போய்உள்ளது.கோவிலின் மேல்பாகத்தில் மரங்கள் முளைத்து கோவிலின் அடையாளத்தையேமறைத்துக்கொண்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள நந்தி சிலை, யானை சிலை,மற்றும் குதிரை சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள் சேதமடைந்து, உடைந்துவிழுந்தும் காண்பதற்கே வேதனையளிக்கும்படி இருக்கிறது. ஒரு காலத்தில்மனிதர்களால் சூழப்பட்டு விழாக்கள் எடுக்கப்பட்ட இக்கோவில் தற்போதுபுதர்களாலும், முட்செடிகளாலும்,அச்சமளிக்கும் விதத்தில்இருக்கிறது.இக்கோவிலுக்கு பல்வேறு கிராமங்கள்,தேசங்கள் தாண்டியும்இப்போதும் பக்தர்கள் இருந்து வருகிறார்கள்.வரலாற்று பொக்கிஷமாக இருக்கும்சேதமடைந்துள்ள இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம்நடத்தவேண்டும்.மேலும் கோவிலுக்கு என்று இருக்கிற 100 ஏக்கருக்குமேல் உள்ளநிலங்களில் இருந்து வருகின்ற வருமானத்தை பா-துகாத்து இந்த கோவிலைபராமரிக்கவேண்டும்.முக்கியமாக கோவிலுக்கு என உள்ள இடங்களில் ஆக்கிரமிப்புசெய்துள்ளதையும் மீட்டெடுக்கவேண்டும் என வானமாதேவி கிராமமக்கள்கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
நம் கண் முன்னே ஆயிரக்கணக்கான கோவில்களை நாம் சிதிலமடைந்து மறைந்துபோக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல இடங்களிலும் புதிதுபுதிதாக கோவில்கள் எழுப்புவது நல்ல விஷயம் என்றாலும், நம் கண் முன்னே வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்களை இவ்வாறு சேதமடைந்து அதன் தடம் இல்லாமலே போகச் செய்வது எந்த விதத்தில் நியாயம்? இதுபோன்ற சோழர்களால் உருவாக்கப்பட்ட கோவில்கள், நீர்நிலைகள் என ஏகபட்டது உள்ளன. நாம் அதனை தற்போது வரை வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது நமது பொக்கிஷம் என்பதை நாம் உணர மறுக்கின்றோம். இனியாவது நாம் ஒவ்வொருவரும் நமது வரலாற்று சிறப்புமிக்க கோவில்களையும், நீர்நிலைகளையும் மற்றும் பல விஷயங்களை மீட்டெடுத்து அதன் உண்மையான பயனை பெற வேண்டும். அதை நமது வருங்கால தலைமுறைக்கு பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை இனியாவது காலம் தாழ்த்தாமல் விரைவாக தொடங்குவோம்.
No comments:
Post a Comment