கடலூர் மாவட்டம் புவனகிரி,சிதம்பரம் வட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது வெள்ளாறு.இது முக்கிய வடிகால் நீர்நிலையாக இருக்கிறது.இதனால் இரண்டு வட்டங்களிலும் உள்ள நூற்றுக்குமேற்பட்ட கிராமங்கள் தரமான குடிநீர், முப்போகமும் விவசாயம் என புத்துயிர்பெற்று வந்தன.ஆனால் தற்போது இந்த வெள்ளாற்றில் கடல்நீர் உள்புகுந்ததால் அனைத்தும் தவிடுபொடியாகிபோயின. குடிநீர் தரம் மாறிவிட்டது.விவசாய வயல்களில் விவசாயம் செய்தாலும் போதுமான மகசூல் எடுக்கமுடியவில்லை.மண்ணின் வளமை குன்றிபோய்விட்டது.இது பல ஆண்டுகளாக தொடர்ந்து விவசாயிகளையும், பொதுமக்களையும் வாட்டிவந்த நிலையில் கடந்த ஆட்சியில் பொதுமக்களின் கோரிக்கையின்படி கடலூரில் நடைபெற்ற 16.08.2017 அன்று நடைபெற்ற டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அன்றைய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு.ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்பின்னர் ரூ.92.58 கோடி(நிலம் கையகப்படுத்த ரூ.33.20 கோடி சேர்த்து வழங்கப்பட்டது) ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் தற்போது அதனை தொடர்ந்து செயல்படுத்தி விரைந்து தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி தமிழக நீர்வளத்துறை அமைச்சர்க்கு உரிய விபரங்களுடன் உள்ள மனுவை புவனகிரி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து அனுப்பியுள்ளனர். இதன்பின்னர் அதன் நகலை விரைந்து தடுப்பணைகள் பணிகள் துவக்கவேண்டி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று 23-07-2021 அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன், அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று வழங்கினார்கள்.
குறிப்பு
சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகி 102 கி.மீ. பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளாறு என்ற பெயருள்ள நதியாகி பின்னர் அது கடலூர் மாவட்டம் கூடலையாற்றூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அருகில் வங்கக்கடலில் கலக்கிறது.வெள்ளாற்றின் மொத்த நீளம் 205 கி.மீ ஆகும்.இதில் கீழ் வெள்ளாற்றின் நீளம் 103 கி.மீ ஆகும். வெள்ளாற்றின் கடைசியாக அமையபெற்ற சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து செல்லும் வெள்ளாறானது அடுத்தடுத்து வளைந்து நெளிந்தும் செல்வதாக இருக்கிறது.இவ்வாறான நிலையில் பரங்கிப்பேட்டை பகுதி ஆற்றின் வழியாக கடல்நீர் அதிகம் உள்புகுந்ததால் இப்பகுதியில் இருக்கும் நிலத்தடி நீர்மட்டம், நீர்நிலைகளை உப்புநீராக மாற்றியிருக்கிறது.இதனால் சிதம்பரம் மற்றும் புவனகிரி வட்டத்தில் உள்ள தம்பிக்குநல்லான்பட்டினம்,மேல்புவனகிரி, கீரப்பாளையம்,வடஹரிராஜபுரம்,பரதூர், சாக்காங்குடி,ஒரத்தூர்,உடையூர்,கிளாவடிநத்தம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அவற்றிலுள்ள விளைநிலங்கள்,நிலத்தடிநீர் போன்றவை உப்புநீராக மாறிவிட்டது.இதனை குடிப்பதற்கும்,விவசாயத்திற்கும் பயன்படுத்தமுடியாதநிலையிலும் உள்ளது.இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் இதனைதடுக்ககோரி தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தநிலையில் பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும்பொறுட்டு வெள்ளாற்றின் குறுக்கே பு,ஆதிவராநல்லூர் கிராமத்தில் தடுப்பணை அமைப்பதற்கு கடந்த ஆட்சியில் கடலூரில் நடைபெற்ற டாக்டர் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி .கே.பழனிச்சாமி அவர்களால் 16.08.2017 அன்று அறிவிக்கப்பட்டு அதற்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது.பின்னர் இது செயற்பொறியாளர் பொ.ப.து. திட்ட உருவாக்ககோட்டம் வேலூர் வாயிலாக மதிப்பீடு 92.58 கோடி(நிலம் கையகப்படுத்த ரூ.33.20கோடி சேர்த்து) தயாரிக்கப்பட்டது. அப்போது இப்பணி சிறப்புத்திட்ட கோட்டம் கடலூர் மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.மேலும் இப்பணிக்கான தேவையான நிலம் கையகப்படுத்த மதிப்பீடு தயார்செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக அரசுக்கு அரசாணைபெற அறிவுறுத்தப்பட்டதன்பேரில் கரை அமைக்கும் பணிக்காக பு.ஆதிவராகநல்லூர்,ஆயிபுரம், கீழ்புவனகிரி, மேலமூங்கிலடி,கீழமூங்கிலடி, ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும்பொருட்டு மதிப்பீடு தயாரித்து மாவட்ட ஆட்சியர் கடலூர் அவர்களுக்கு மேல் நடவடிக்கை அனுப்பப்பட்டது. இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம், மற்றும் சிதம்பரம் வட்டங்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவது குறைக்கப்படும். எனவே புவனகிரி மற்றும் சிதம்பரம் ஆகிய வட்டங்களில் உள்ள மேற்கண்ட கிராமமக்களின் ,விவசாயிகளின், கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு உரிய அரசாணை பிறப்பித்து இந்த ஆண்டே வெள்ளாற்றின் குறுக்கே பு.ஆதிவராகநல்லூர் கிராமத்தில் தடுப்பணைக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Friday, July 23, 2021
புவனகிரி அருகே வெள்ளாற்றில் உடனடியாக தடுப்பணைக்கட்ட வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் மனுஅளித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment