கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பலத்த சேதம் அடைந்திருந்தது. இதனையடுத்து கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் பணிகள் நிறைவுற்ற பின் அதன் திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சிவி சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.. பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவியை வழங்கினர். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் வளாகத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த விழாவில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், தலைமை கழக பேச்சாளர் முருகுமணி, முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமாறன், சேத்தியாத்தோப்புகூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கானூர் கோ.பாலசுந்தரம், புவனகிரி நகர கழக செயலாளர் செல்வகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் வீரமூர்த்தி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் சிவப்பிரகாசம்,, ஒன்றிய துணைச் சேர்மன் வாசுதேவன், புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, சேத்தியாதோபபு நகர கழக செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன், கீரப்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் அசோக்குமார், கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன், கம்மாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் மருதை முனுசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னரகுராம், கம்மாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் மேனகாவிஜயகுமார் மாவட்ட ஆவின் தலைவர், நல்லூர் ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய பெருந்தலைவர் லதா ஜெகஜீவன் ராம், தகவல் தொழில்நுட்ப பிரிவு முத்தமிழ், நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் லதாராஜேந்திரன்,ஜெயராஜ், லெனின், சிவஞானம், இசை பாலா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஒன்றிய, நகர கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment