உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, July 17, 2021

புவனகிரி அருகே அடிபட்ட மயிலுக்கு கிராம மக்கள் முதலுதவி செய்தும் காப்பாற்ற முடியாமல் போன சோகம்

 

India national bird peacock

INDIA NATIONAL BIRD PEACOCK


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மயில்கள் இருந்து வருகின்றன.அவை காலை மற்றும் மாலை வேளைகளில் வயல்களில் இரைகளை பிடித்து உண்ணுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாலை வேளையில் பறந்து வந்த மயில் ஒன்று ஒரு வீட்டின் முன்னால் விழுந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் அந்த மயிலை மீட்டு அதற்கு முதலுதவி அளிக்க முயன்ற நிலையில் மயிலின் காலில் அடிபட்டு காயம் இருந்ததை கண்டனர். உடனடியாக மயிலுக்கு தண்ணீர் மற்றும் மஞ்சள் கரைத்து காயத்தின் மேல் பூசினர. இருந்தபோதிலும் சிறிது நேரமே உயிரோடு இருந்த மயில் திடீரென்று இறந்து போனது. இதனையடுத்து மயில் இறந்த தகவலை சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் இறந்த மயிலை பெற்று பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர் கிராம மக்கள் காப்பாற்ற முயன்றும் மயில் உயிரிழந்தால் அதனால்  கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment