உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, July 18, 2021

விருத்தாசலத்தில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் புவனகிரி எம்எல்ஏ பங்கேற்று அறிவுறுத்தல்களை வழங்கினார்

ADMK MEETTING VIRUTHACHALAM


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பைபாஸ் சாலையில்  கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் தலைமை வகித்தார்.தலைமை கழகபேச்சாளர் முருகுமணி, மாவட்ட அம்மாபேரவை செயலாளர்  உமாமகேஸ்வரன், ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரனி செயலாளர் வீரமூர்த்தி, முன்னாள் எல்எல்ஏ கலைச்செல்வன், ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.விருத்தாசலம் பைபாஸ் சாலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்று அறிவுரைகளை வழங்கிய மாவட்ட கழக செயலாளரும்,புவனகிரி எம்எல்ஏமான அருண்மொழித்தேவன் பேசும்போது எதிர்வரும் உள்ளாட்சித்தேர்தலில் நாம் கடுமையாக உழைத்து அனைத்து இடங்களிலும் வெற்றிபெறவேண்டும்,கர்நாடகத்தில் மேகதாது அணைக்கட்டுவதற்கு தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தல்,தேர்தல் வாக்குறுதிகளை சொன்னதை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தல்,
மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் புவனகிரி மேற்கு ஒன்றி செயலாளரும்,புவனகிரி ஒன்றிய பெருந்தலைவருமான சிவப்பிரகாசம்,கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாரும், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலைத்துணைத்தலைவருமான விநாயகமூர்த்தி,கம்மாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் மருதைமுனுசாமி,கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரகுராமன்,கம்மாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் மேனகாவிஜயகுமார், நல்லூர் ஒன்றிய செயலாளர் பச்சைமுத்து, கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன், விருத்தாசலம் நகர கழக செயலாளர் சந்திரகுமார், கங்கைகொண்டான் நகர கழக செயலாளர் மனோகரன், சேத்தியாத்தோப்பு நகர கழக செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் புருஷோத்தமன் , விருத்தாசலம்,திட்டக்குடி,புவனகிரி பகுதிகளின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

ADMK MEETTING VIRUTHACHALAM





No comments:

Post a Comment