கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அழிச்சிக்குடி கிராமம்உள்ளது.இக்கிராமத்தில் ஆற்றங்கரை தெருவோரம் ஏராளமான குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.இந்நிலையில் இந்த குடும்பத்தினர்க்கு கடந்த பல ஆண்டுகளாகசுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் அவதிப்ப்ட்டு வருகிறார்கள்.சுடுகாட்டுக்குபாதை அமைத்து தரக்கோரி பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைததுள்ளனர்.ஆனால் எந்த அதிகாரியும் இதுகுறிதது நடவடிக்கை எடுக்கவிலலைஎன வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.இங்கு யாராவது இறந்துவிடும்போது அவர்களைஆற்று வழியாகத்தான் சுடுகாட்டுக்கு தூக்கிச்செல்கிறார்கள். அவ்வாறுசெல்லும் பாதையானது இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குமேல் முள்பாதையாகஇருக்கிறது.முக்கியமாக ஆற்றில் தண்ணீர் செல்லும்காலங்களில் இறந்தவரதுஉடலை எடுத்துச்செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது தொடர்ந்து சுடுகாட்டுக்குசெல்ல முடியாத சூழலும் உள்ளது..பல நேரங்களில் இறந்தவர் உடலை ஆற்றில் செல்லும் தண்ணீரில் விடும் சோகமானநிலையும் இருககிறது.இவ்வாறன நிலையில் தங்களது பகுதிக்கு சுடுகாட்டுக்குபாதை கேட்டு ஏராளமானவர்கள் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்றுதிரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிதம்பரம் சார்ஆட்சியர் தஙகளதுகோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி புவனகிரிவட்டாட்சியரிட்ம் தெரிவித்தும் அவர் தங்களை அலைக்கழிப்பதாகதெரிவிக்கிறார்கள்.அதனால் இப்போது நாங்கள் புவனகிரி வட்டாட்சியரிடம்நேரில் பார்க்க வந்தபோது அவர் தற்போது இல்லை.எங்களை பார்ப்தைதவிர்க்கும்படியாக, அவர் சரியாகவும் பதிலளிக்கவில்லை. இனியும் தங்களைஅலையவிடமால் அழிச்சிக்குடி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு சுடுகாட்டுக்கானபாதை அமைத்து தரவேண்டும் என அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கைவைத்தனர்.இதுகுறித்து புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரிக்கையில்சுடுகாட்டுக்கான பாதைகுறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது எனவும்,கிராமநிர்வாக அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment