கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி பேருந்து நிறுத்த பகுதியில் விக்கிரவாண்டி-தஞ்சை நான்குவழி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த பழமையான,, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலை சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்டது. சிலை இருந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைய உள்ளதால் அதனால் சிலை அகற்றப்பட்டது..மிகப்பழமையான சிலையாக சட்டமேதை டாக்டர்அம்பேத்கர் சிலை இருந்ததால் அப்பகுதியில் இருந்த பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் ஒன்று திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜேசிபி எந்திரத்தின் மூலம் சிலை இருந்த பீடம் இடிக்கப்பட்டு பீடத்தின் மேல் இருந்த சிலை பத்திரமாக அகற்றப்பட்டது.அகற்றப்பட்ட சிலையானது அப்பகுதியில் உள்ள நூலகத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது. மேலும் விக்கிரவாணடி தஞ்சை நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவுற்ற பின் அப்பகுதியில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் சிலை வைக்கப் படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ், எஸ்ஐக்கள் மாணிக்கராஜா,அபுஇப்ராகிம்,ஜோதி மற்றும்
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment