கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் காமராஜரின் 119 வது பிறந்நாள் விழா கொண்டாடப்பட்டது. சேத்தியாத்தோப்பு வணிகர் சங்கம், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் ஆகியவை இணைந்து கொண்டாடிய இந்தக்கொண்டாட்டத்தில் சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மகாராஜன் தெற்கு மெயின்«££ட்டில் உள்ள கல்விக்கண்திறந்த காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் காமராஜரின் மலரும் நினைவுகள் பகிரப்பட்டது. இதனையடுத்து அனைவருக்கும் இனிப்புக்க்ள வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து வியாபாரிகள் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, மணிமாறன்,செங்குட்டுவன், வசந்தம் இளவரசன்,
அண்ணாமலை, ஆனந்தன், அன்பழகன்,ராஜசேகரன்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாலையில் கடைத்தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு அரிமாச்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை கபசுர குநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் துணைத்தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் மணிமாறன்,அன்பழகன்,டாக்டர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேத்தியாத்தோப்பு காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா பங்கேற்று பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கும் முககவசம், கபசுரகுடிநீரை வழங்கினார்.இதில்நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்படடது.இதில் மேலும் பாலமுருகன்,அண்ணாமலை, சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment