கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் விவசாயிகளின் குறுவை சாகுபடி வழிமுறைகளை வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்தனர்.கீரப்பாளையம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற இந்த ஆய்வில் கீரப்பாளையம் வட்டாரவேளாண்மை உதவிஇயக்குநர் சித்ரா தலைமை வகித்தார்.துணை வேளாண்மை அலுவவர் கோபி, வேளாண்மை உதவி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநிலத்திட்டம் வேளாண்மை துணை இயக்குநர் ரமேஷ் வருகை தந்து வாழைக்கொல்லை கிராமத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள நெல்வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது வாழைக்கொல்லை கிராம விவசாயிகள் குறைந்த பயிர் பராமரிப்பில் இயற்கைமுறையிலான பயிர்பாதுகாப்பு வழிமுறைகள் செய்து வருவதை வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் விளக்கிகூறினர்.அதனை அதிகாரிகள் பொறுமையாக கேட்டறிந்து அதனடிப்படையில் அதிக மகசூல் மற்றும் லாபம் எடுப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.பின்னர் கிராமத்தில் குறுவை சிறப்பு சாகுபடித்திட்டத்திற்கான தொகுப்பினை பெற விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டது.இதில் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதமானியத்தில் உரம்,50சதம் மானியத்தில் விதைநெல்,தக்க பூண்டு தழை உரவிதை வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற குறுவை சாகுபடி செய்ததற்கான சிட்டா, விஏஓவிடம் அடங்கல்சான்று, ஆதார்கார்டு ஆகியவற்றின்மூலம் உழவன் ஆப்மூலமும், இல்லை எனில் சிட்டா,அடங்கல்,ஆதார் இவற்றை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் பதிவு செய்தல்வேண்டும்.இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டல் இலவசமாக ரூ.185 மதிப்புள்ள இரண்டுமூட்டை யூரியா,ஒருமூட்டை டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் ஆகியவை வழங்கப்படுகிறது.விருப்பமுள்ள விவசாயிகள் 50 சதமானியத்தில் விதை நெல்லும் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில் முன்னோடி விவசாயிகள் செந்தில்ராயர்,ரவிவர்மன்,செல்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Wednesday, July 14, 2021
வாழைக்கொல்லை கிராமத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடி வயல்வெளி ஆய்வு மற்றும் குறுவை சாகுபடி தொகுப்பு விண்ணப்பம் பெறுதல்
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment