உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, September 19, 2019

ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடு கொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை


ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது நங்குடி கிராமம்.இக்கிராமத்தின் வழியாக  சென்னை&கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.இந்த சாலையை விக்கிரவாண்டி முதல், தஞ்சை வரையான  நான்கு வழிச்சாலைப்பணிக்கு விரிவாக்கம் செய்து அதற்கான நிலம்,மனை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.தற்போது சாலை விரிவாக்கம் பணிகள் வெகுவேகமாக நடந்து வருகின்றது.இந்நிலையில் இங்குள்ள நங்குடி கிராமத்தில் நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் சாலை விரிவாக்கப்பணிக்காக தங்களது நிலங்களையும்,மனைகளையும் கொடுத்துள்ளனர்.இந்த சூழலில் அவ்வாறு நிலம்,மனை கொடுத்தவர்களுக்கு முரண்பாடாக பலருக்கு சரியானபடி இழப்பீடு கொடுக்காத நிலை உள்ளதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.அவர்கள் கூறும்போது ஒரே கிராமத்தில் உள்ள நிலம்,மனைகளுக்கு சரி சமமான இழப்பீடு கொடுக்காமல் ஏற்றத்தாழ்வாகவும்,எதற்கும் பொருந்தாத அளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.அதனால் தற்போதை நிலவரப்படி தங்களுக்கு சரியான சமமான இழப்பீடு வேண்டும் என்று கூறுகின்றனர்.இங்குள்ள சிலருக்கு அதிகாரிகளின் கவனக்குறைவால் மனைகொடுத்த பயனாளிக்கு பணம் போடாமல் மாறுதலாக வேறு ஒருவருடைய வங்கி கணக்கில் பணம்போடப்பட்டு அதனை உண்மையான பயனாளி பெறமுடியாமல் வேதனையோடு அலைவதும் நடந்துள்ளது.இங்கு இதனால் பாதிக்கப்பட்ட பலர் இணைந்து ஒன்றாக நீதிமன்றத்தினை நாடியுள்ளனர்.மேலும் பலர் தங்களுக்கான உண்மையான இழப்பீட்டை எப்படி பெறுவது என்று தெரியாமல் மனவேதனையுடன் பல அதிகாரிகளையும் பார்க்க அலைந்துகொண்டிருக்கிறார்கள்.தமிழக அரசு இக்கிராமமக்களுக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்கும்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் கோரிக்கையாக உள்ளது.