கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராடசியில் சிறந்த முன்மாதிரி ஊராட்சியாகவும்,குப்பைகளிலில்லா ஊராட்சியாகவும், சுற்றுபபுறச்சூழலை காக்கவும் பொருட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி கீரப்பாளையம் ஊராட்சியில் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் மண்புழு கூடத்தினை மாநில திட்ட அலுவலர் சென்னை கௌதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, சுகாதார ஒருங்கிணைப்பாளர் பார்த்தீபன் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.கீரப்பாளையம் வடடார வளர்ச்சி அதிகாரிகள் சுப்பிரமணியன்,சீனிவாசன், ஊராட்சிமன்றத்தலைவர் கீரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.பின்னர் நடைபெற்ற ஆய்வின்போது மாநில திட்ட ஆலோசகர் கௌதம் மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தினை ஆய்வுசெய்து
பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.ஊராட்சியின் தூய்மையை கருத்தில்கொண்டு அனைத்து தரப்பினரும் ஊராட்சி மன்றத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.அனைவரின் கூட்டு முயற்சியால்தான் இந்த ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாகவும், குப்பைகளற்ற கிராமமாகவும் மாறும் என அவர்கள் அறிவுறுத்தினார்.ஆய்வு பணிகளை முடித்த மாநில திட்ட ஆலோசகர் சென்னை கௌதம் மண்புழு உரம் கூடத்தின் அருகில் மரககன்றுகளையும் நட்டார்.இந்த ஆய்வின்போது ஊராட்சி செயலர் தேவதாஸ், ஊராட்சி துணைத்தலைவர்,வார்டு உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள் என பலரும் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment