உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, July 8, 2021

வாழைக்கொல்லை கிராமமக்களின் சார்பில் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

NMMS EXAM SUCCESS

NMMS EXAM SUCCESS



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வாழைக்கொல்லை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளி மாணவர்கள் தேசிய வருவாய் வழித்திறன் தேர்வினை எழுதினர்.இந்த தேர்வின்மூலம் மத்திய அரசு 9ஆம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
கடந்தாண்டு போலவே இந்தாண்டும்  என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்தவில் இப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.அதேபோல் இந்தாண்டும் மாவட்டத்தில் இப்பள்ளி முதலிடம் பெற்ற பள்ளியாகவும் இருக்கிறது.இதனுடன் சிறந்த பள்ளிக்கான விருதினையும் இப்பள்ளி பெற்றுள்ளது.கடலூர் மாவட்டத்திலியே இதுவரை இப்பள்ளி மாணவர்கள் 49 பேர் இந்த தேர்வினை எழுதி வெற்றிப்பெற்றுள்ளனர்.அதிலும் பள்ளியின் மாணவி செல்சியா மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி வாழைக்கொல்லை ஊராட்சி மன்றத்தின் சார்பில் பள்ளியில் எளிமையாக நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி குறளரசன் தலைமை வகித்தார்.வட்டார கல்வி அலுவலர்கள் குமார்,மோகன், அரிமா சங்க மாவட்ட தலைவர் மணிமாறன்,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புகழேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் வரவேற்றார்.மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் சிறபபு விருந்தினராக வருகை தந்தார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிமாணவர்களின் திறமைகளை பட்டியிலிட்ட மாவட்ட கல்வி அலுவலர் இதற்காக கடுமையாக உழைத்து வரும் பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பாராட்டும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.இதனையடுத்து தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு தேர்வில் வெறறிப்பெற்ற 13 மாணவர்களுக்கும், மற்றும் சென்றாண்டு இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும் ஊராட்சிமன்றத்தலைவர் ஜெயந்திகுறளரசன், மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட பலராலும்  பரிசுகளை வழங்கி கௌரவித்தனர் சிவனேசன், ஆசிரியர்கள் இருதயராஜ், சுப்பிரமணியன் மாணவர்களுக்கு பயன்படும் அறியல்துறை சார்பான புத்தகங்களை மற்றும் பரிசு பொருட்களை  வழங்கினார்கள்.
இதில் பள்ளியின் ஆசிரியர்கள் அன்பகம்,வள்ளி,கீதா,கிருத்திகா,கிறிஸ்டோபர்,சுப்ரமணியன்,இளஞ்செழியன்,ராஜன்,கிராம முக்கியஸ்தர்கள் குறளரசன்,பன்னீர்செல்வம்,சிவனேசன், கொளஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முடிவில் பட்டதாரி ஆசிரியர் கருணாகரன் நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment