கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது மழவராயநல்லூர் கிராமம்.இக்கிராமத்தில் நேருவில் நகர் மனைப்பிரிவு கடந்த 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இந்த மனைப்பிரிவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் மனைகளை வாங்கி வீடுகட்டி குடியிருந்து வருகிறார்கள்.பலர் மனைகளை வாங்கி காலியாகவே போட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த மனைப்பிரிவில் உள்ள 262 மனைகளில் இன்னும் பதினான்கு மனைகளே விற்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே இந்த மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு முறையான சாலை, வடிகால் ,குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் மனைகளை விற்பனை செய்துள்ளதாக நேருவில்நகர் குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து இங்கே குடியிருந்து வருபவர்கள் தெரிவிக்கும்போது அடிப்படை வசதிகள் குறித்து நேருவில் நகரில் மனைகளை விற்பனை செய்தவர்களிடம் சென்று கேட்கும்போது நீங்கள் அதிகாரிகளையும், சம்மந்தப்பட்ட ஊராட்சியையும் போய்பாருங்கள் என ஒரே பதிலையே சொல்லி வருகிறார்கள் என்கின்றனர்.கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், மற்றும் ஸ்ரீமுஷ்ணம்,கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை சென்று பார்த்தும் மனுமேல் மனுகொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.இந்த மனைப்பிரிவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நான்கடி முதல் ஐந்தடி வரை தண்ணீர்த்தேங்கி குடியிருப்புவாசிகளை துன்பத்திற்குள்ளாக்கி வருகிறது என்று கூறும் இவர்கள், எப்போதும் நாங்கள் தீவுக்குள் சிக்கியவர்களாக இருக்கிறோம்.இப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டமும் இருப்பதால் எங்களால் அச்சமின்றி இருக்கமுடியவில்லை.மேலும் இப்போது நான்குவழிச்சாலைப்பணிகளும் நடப்பதால் நேருவில் நகருக்கு செல்வதற்கு வழியே இல்லாமலும் இருக்கிறது.
இனியாவது மாவட்ட நிர்வாகமும்,ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் எங்களை அலையவிடாமல் உடனடியாக இங்குள்ள குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என நேருவில் நகர் குடியிருப்பு வாசிகள் கண்ணீரோடு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் வரும் இந்த ஊராட்சியில் உள்ள நேருவில் நகர் குடியிருப்புவாசிகளுக்கு எப்போது விடிவு வரும் எனதெரியவில்லை என்பதே தற்போதைய நிலையாக இருக்கிறது.
Monday, June 28, 2021
மழவராயநல்லூர் ஊராட்சியில் நேருவில் நகரில் குடியிருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து தரமறுப்பதாக குற்றச்சாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment