உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, June 27, 2021

பயன்பாடற்ற மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வடக்கு திட்டை கிராம மக்கள் கோரிக்கை கண்டுகொள்ளாத அதிகாரிகள்



கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வடக்கு திட்டை கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் முகப்பில சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இந்த நீர்த்தக்கத் தொட்டி தற்போது பயன்பாட்டில் இல்லாமலும் மிக அதிகமான சேதமும் ஏற்பட்டுள்ளது.

 பழமையான சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படாமல் இருப்பதால் பெரும் ஆபத்து சூழ்ந்து இருப்பதாகவும் எப்போதும் அச்சத்தில் இருப்பதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர. கிராமத்தின் முகப்பில் இருப்பதால் இதன் வழியாக செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் ,மற்றும் அருகிலுள்ள அரசு பள்ளிகளின் மாணவர்கள் என பலரும் செல்வதால் இப்பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் பகுதியாகவும் இது இருக்கிறது.

 இந்நிலையில் இந்த பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு வேறு இடத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் தற்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பேராபத்தை ஏற்படுத்தும் சூழலில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது .

உடனடியாக  அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் இதனை இடித்து அகற்றிவிட வேண்டும் என தெரிவிக்கும் கிராம மக்கள்  சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய நீர்தேக்க தொட்டி அமைத்து தந்தால் மட்டுமே இங்குள்ள குடிநீர் பிரச்சினையை சரி செய்ய முடியும் என அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment