கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானோ நோய் தொற்று
மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும்
கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம்
கங்கைகொண்டான் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் கோரோனோ விதிமுறைகளை
காற்றில் பறக்க விட்டு, கொரோனோ நோய்த்தொற்றை விலைகொடுத்து வாங்கி
வருகிறார்கள். கடைத்தெருக்களில் கட்டுப்பாடின்றி மக்கள் கூட்டம்
அலைமோதுகிறது. கடைகளில் சமூக இடைவெளியை மறநது முண்டியடித்துக்கொண்டு
பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் பெரும் அச்சமும், அபாயமும்
ஏற்பட்டுள்ளது இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும்போது விதிமுறைகள்
படி காலை 6 மணி முதல் 12 மணிவரை கடைகள் திறந்து இருக்கின்றது.
அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி கூட்டம் இல்லாமல், சமூக இடைவெளியோடு
பொருட்களை வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வண்ணம் உள்ளனர.
அவர்களின் அறிவிப்புகளை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள் தங்கள்
இஷ்டம்போல் இரு சக்கர வாகனங்களில் அதிகமாக சென்று கொண்டும் கடைத்
தெருக்கள் மற்றும் கடைகளிலும் பின்னால் ஏற்படப் போகும் அபாயத்தை மறந்து
பொருட்களை வாங்கி வருகிறார்கள். உடனடியாக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை
எடுக்க வேண்டும். எனவும் அப்படி செய்தால் மட்டுமே கொரோனோ நோய் தொற்றை
முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment