உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, May 13, 2021

வேளாண்மைத்துறை அதிகாரிகள் பெயரளவிற்கு செயல்படுகிறார்களா?விவசாயிகள் வேதனை

 கடலூர் மாவட்டம் புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம் பகுதிகளில் தற்போது குறுவை நடவுப்பணிகள் முப்பதாயிரம் ஏக்கருக்குமேல் விவசாயிகள் துவக்கியுள்ளனர்.இவ்வாறான நிலையில் விவசாயிகள் பலர் நாற்றாங்கால் தயார்செய்தல்,கோடை உழவு மேற்கொள்ளுதல்,வயலுக்கு இயற்கை உரங்களை சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவுக்கு முந்தைய பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.விவசாயிகள் கடினமாக உழைத்து தங்களுடைய வயல்களில் குறுவை நடவுக்கான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தங்களுக்கு போதிய வழிக்காட்டல் வழங்கவில்லை என குற்றச்சாட்டினை அவர்கள் வைக்கின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது வேளாண்மைத்துறை அதிகாரிகள் நாங்கள் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.ஏதாவது ஆலோசனை மற்றும் வயலுக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் குறித்து நாங்கள் கேட்கபோனால் அவர்கள் எப்போதும் வெளியில் இருப்பதாகவே அலுவலகத்தில் இருப்பவர்களால் பதில் கூறப்பட்டு வருகிறது.தொலை பேசியிலும் பிடிக்கமுடியாத நிலை உள்ளது.

இன்றைய இக்கட்டான காலக்கட்டத்தில் உயிரை பனயம் வைத்து விவசாயத்தை செய்து வருகிறோம்.ஆனால் அதிகாரிகள் பெயரளவிற்கு சில இடங்களில் இருந்து பார்த்து விட்டு ஆய்வு செய்ததாக தகவல் பார்க்க முடிகிறது.நடவுப்பணியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கைகளால் நடவு செய்வது,நேரடி நெல்விதைப்பு, மற்றும் எந்திர நடவு உள்ளிட்டவைகள் இருக்கிறது.இதில் விவசாயிகளுக்கு எது சிறந்தது பாதுகாப்பானது, சிக்கனமானது, போன்ற எவ்விதமான வழிக்காட்டலும் வழங்கப்படவில்லை.விதை நேர்த்தி மற்றும் நடவுக்கு முந்தைய ,பிந்தைய பயிர்பாதுகாப்பு வழிமுறைகள் போன்றவற்றை எடுத்துக்கூற யாருமில்லை.
எங்களுக்கு தெரிந்ததை வைத்து ஏதோ பெயரளவிற்கு நடவு செய்கிநோம்.எங்களுக்கு உதவக்கூடிய வேளாண்மைத்துறை அதிகாரிகளை நாங்கள் தேடிக்கண்டுப்பிடிக்கவேண்டியதாக இருக்கிறது.இவ்வாறாக இருந்தால் எங்களுக்கு எப்படி விவசாயத்தில் உயர்வைப்பார்க்க முடியும்? இனியும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பெயரளவிற்கு இல்லாமல் விவசாயிகளுக்கு உதவும் அதிகாரிகளாக செயல்படவேண்டும் எனஅவர்கள் வேதனையுடன் கோரிக்கை வைத்தனர்.

No comments:

Post a Comment