கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மேல்வளையமாதேவி ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சியில் ஊராட்சிமன்றத்தின் சார்பில் கிராமமக்களுக்கு கொரானோ நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்படி ஒவ்வொரு வீடாக சென்று வெப்பத்தின் அளவு, ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யும் நிகழ்ச்சி துவங்கியது.இதனை புவனகிரி வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தரம் துவக்கி வைத்தார்.புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்வளையமாதேவி ஊராட்சியில் இந்த சோதனை முதலாவதாக துவக்கப்பட்டுள்ளது, ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இப்பரிசோதனை நடைபெறுகிறது.பொதுமக்கள் லேசான நோய்த்தொற்று அறிகுரிகள் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டும்,வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது
என வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தரம் தெரிவித்தார்.இதில் ஊராட்சி மன்றத்தலைவர் செம்புலிங்கம்,ஊராட்சி செயலர் லீமா,மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment