உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, May 17, 2021

வேளாண்மை துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலால் தற்போது குறுவை நடவுபணிகளை துவக்கி வரும் விவசாயிகள் கோடை உழவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்

 



கடலூர் மாவட்டம் கீரப்பாளையம், புவனகிரி?, கம்மாபுரம் உள்ளிட்ட
பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை நடவு பணிகளுக்கான ஆயத்த பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி இப்பகுதிகளில் வேளாண்மைத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி தங்கள் வயலில் கோடை
உழவுகளை மேற்கொள்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கோடைஉழவு மேற்கொள்வதால் மண்ணின் தன்மை மேம்படுத்தப்பட்டு, பயிர்களுக்குதேவையான  சத்துக்கள் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீராக கிடைக்கும்,குறைந்த நீரை கொண்டு அதிக பலனைப் பெற முடியும் வயலில் நுண்ணுயிர்
பெருக்கம் அதிகரித்தும், மண்ணின் ஈரப்பதம் அதிகரிப்பதால் குறைந்த செலவில்அதிக மகசூல் எடுக்க முடியும், பல்வேறு வகையான பயிர்களையும் பயிர்செய்வதற்கு ஏற்றதாக  வயல் இருக்கும்  என அதிகாரிகள் அறிவுறுத்தல்
வழங்கியதால் விவசாயிகள் தற்போது தீவிரமான கோடை உழவு செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment