கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 400 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆ.அருண்மொழித்தேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கொரோனா தொற்று பாதிக்கபபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கபபட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் கேட்டறிந்தனர். மேலும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உயரிய சிகிச்சை அளித்திடவும் சத்தான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திடவும் அவர்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார்கள். அப்போது அங்கு உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு ஹார்லிக்ஸ், பழங்கள், பிஸ்கட், பிரட், பேரிச்சம்பழம், குடிநீர் உள்ளிட்ட பொருட்களை புவனகிரி மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.அருண்மொழிதேவன், கே.ஏ.பாண்டியன் ஆகியோர் வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாளிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்டக் கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என். குமார்,கிழக்கு
மாவட்ட அம்மா பேரவை செயலாளர், சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவருமான கானூர் கோ.பாலசுந்தரம், மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் முருகமணி, புவனகிரி நகர கழக செயலாளர் செல்வகுமார், புவனகிரி ஒன்றிய துணைத்தலைவர் வாசுதேவன், மாணவரணி வீரமூர்த்தி, சிவஞானம், மனோகரன், மருத்துவ அலுவலர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tuesday, May 18, 2021
கொரானோ வார்டில் உள்ளவர்களுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினர்
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment